கே.டி.ராகவனுக்கு சிக்கல் மேல் சிக்கல்.. சிவசங்கர் பாபா அமைப்பு பரபரப்பு புகார்! #KTRaghavan
சென்னை: பாஜகவை சேர்ந்த கே.டி.ராகவனுக்கு தற்போது நேரம் சரியில்லை போல. ஆபாச வீடியோ தொடர்பான சர்ச்சையில் சிக்கி தமிழக பாஜக பொதுச் செயலாளர் என்ற பதவியை ராஜினாமா செய்த அடுத்த நாளே, அவர் மீது சிவசங்கர் பாபா அறநெறி இயக்கம் என்ற அமைப்பு குற்றச்சாட்டு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவை சேர்ந்தவரும் வழக்கறிஞருமான கே.டி.ராகவன் யாரோ ஒரு பெண்ணுடன் செல்போனில் ஆபாச வீடியோ சாட்டிங் செய்தது போன்ற ஒரு வீடியோ யூடியூப் தளத்தில் வெளியானது.
இந்த வீடியோவில் பெண்ணுடன் பேசுவது மற்றும் சுய இன்பம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டது ராகவன் என்று வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

கே.டி.ராகவன் ராஜினாமா
இந்த நிலையில்தான் தமிழக பாஜக பொதுச் செயலாளர் என்ற பதவியை நேற்று ராஜினாமா செய்தார் ராகவன். இந்த பிரச்சனையை சட்டப்படி சமாளிக்க போவதாகவும் தன்னை தவறாக சித்தரிப்பதற்காக வெளியிடப்பட்ட போலி வீடியோ அது என்று, அவர் விளக்கம் அளித்தார்.

வாக்குறுதியளித்தாராம் ராகவன்
இந்த விவகாரம் ஒரு பக்கம் என்றால், சிவசங்கர் பாபா அறநெறி இயக்கம் என்ற அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டு அது சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகிறது. அதில் ராகவன் மற்றும் அவரது மனைவி மீனாட்சி ராகவன் ஆகியோர் சிவசங்கர் பாபா கைதாகாமல் தடுத்துவிடலாம் என்று வாக்குறுதி அளித்திருந்ததாகவும் ஆனால் அது நடக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

3 நாட்களில் ஜாமீன்
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் கூட மூன்று நாட்களில் சிவசங்கர் பாபாவை ஜாமீனில் எடுத்து விடுவோம் என்று இவர்கள் தரப்பு பக்தர்களுக்கு தவறான தகவல்களை தந்து விட்டது என்பதும் அந்த அறிக்கையில் உள்ள மற்றொரு குற்றச்சாட்டாகும்.

நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக புகார்
வேறு யார் உதவியை நாடி இருந்தால்கூட சிவசங்கர் பாபா இப்போது சிறையில் வாடி இருக்க வேண்டிய நிலைமை வந்திருக்காது. ஆனால் தாங்கள் காப்பாற்றி விடுவோம் என்று கூறி, பக்தர்களை நம்ப வைத்து விட்டனர். இதனால்தான், சிவசங்கர் பாபா தற்போது சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார் என்று அந்த அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது. மேலும் கே.டி.ராகவன் மீது பணம் விவகாரம் தொடர்பாகவும் அவ்வமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

சிவசங்கர் பாபா கைது
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள, சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா (79). இவர் தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வரவர புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து டேராடூன் தேடி சென்றது சிபிசிஐடி போலீஸ். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி டெல்லியில் தலைமறைவாக இருந்தார். அங்கு வைத்து அவரை கைது செய்தது காவல்துறை. பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது சிறுமிகள் பாதுகாப்புக்கான போஸ்கோ சட்டம் பாய்ந்துள்ளது.
Recommended Video

அடிமேல் அடி, பட்டக்காலிலேயே படும்
அடிமேல் அடி, பட்டக்காலிலேயே படும் என்பது போல் கே.டி.ராகவனுக்கு எதிராக சிவசங்கர் பாபா அறநெறி இயக்கம் வைத்துள்ள குற்றச்சாட்டும் தற்போது வைரலாகி வருகிறது.

கே.டி.ராகவனுக்கு நெருக்கடி
சமீபத்தில் சிவசங்கர் பாபா நடத்தும் பள்ளியில், ராகவன் மனைவி ஆசிரியராக பணியாற்றி வந்ததாக சில புகைப்படங்கள் சுற்றி வந்தன. இந்த நிலையில்தான் தங்களை நம்பவைத்து ஏமாற்றி விட்டதாக சிவசங்கர் பாபா பக்தர்கள் அமைப்பு இவ்வாறு ஒரு அறிக்கையை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
-
பாஜக இல்லாத சட்டமன்றம்.. 5வது சக்தியாக பரகல பிரபாகர் முன்னெடுக்கும் புதிய அரசியல் அலை.. பின்னணி என்ன -
சாத்தூரில் நயினார் வெல்வாரா? தோற்கடிக்க ஸ்டாலின் 2 முக்கிய ‘மூவ்'.. இதை கவனிச்சீங்களா -
அதிருப்தியில் அண்ணாமலை? தேர்தலில் வாய்ப்பு தராதது ஏன்! பாஜக தலைமை சொன்ன முக்கிய தகவல் -
"அந்த 5%.." கேரளாவில் அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிக முக்கிய மாற்றம்! காரணம் பாஜக தான்! -
முதலில் தமிழன், அப்புறம் தான் இந்து! மேலூர் பாஜகவை அதிரவிட்ட வார்த்தை.. பின்னணியில் விகே பாண்டியன்? -
பெண்களுக்கு மாதம் ₹3000.. வேலையில்லாத ஆண்களுக்கும் உதவி தொகை.. மம்தாவை வீழ்த்த அமித் ஷா மெகா பிளான் -
முதல்வர் பதவியை பிடுங்கிய பிறகும் இப்படியா! நிதிஷுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக.. ஜனாதிபதி மூலம் செக் -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications