சிவசங்கர் பாபா நல்லவர்.. அவரை விட்டுருங்க.. நீதிமன்றத்திற்கு வெளியே முட்டி போட்டு பக்தர்கள் அழுகை
சென்னை: சிவசங்கர் பாபாவிற்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்துள்ளது நீதிமன்றம். ஆனால் சிவசங்கர் பாபாவை விடுதலை செய்யக்கோரி பக்தர்கள் முட்டிபோட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

4 வழக்குகள்
டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை கடந்த ஜூன் மாதம் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சிவசங்கர் பாபா. தற்போது வரை சிவசங்கர் பாபா மீது 4 வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூர் மாணவி
அதேபோல் பெங்களூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியின், பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

17ம் தேதி வரை காவல்
இந்நிலையில் புழல் சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவல் முடிவடைய உள்ள நிலையில், செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி அம்பிகா முன்னிலையில் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார்.
சிவசங்கர் பாபா மீது இருக்கும் மூன்று போக்சோ வழக்குகளில் நீதிமன்ற காவல் முடிவடைந்த காரணத்தினால், ஆஜர்படுத்தப்பட்டார். விசாரித்த நீதிபதி வரும் 17-ம்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

முட்டி போட்டு போராட்டம்
தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே, சிவசங்கர் பாபாவை நோக்கி, சிவசங்கர் பாபா நல்லவர் எனவும், அவர்மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும், எனவே அவரை விடுதலை செய்யக்கோரி முட்டி போட்டு சிவசங்கர் பாபாவின் ஆதரவாளர்கள் கதறினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து சிவசங்கர் பாபாவை சிறையில் அடைப்பதற்காக போலீசார் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications