சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அறத்தின் சீற்றம்.. சிங்கத்தின் நடை.. ஓங்கிய கரம்.. தேசிய அளவில் டிரெண்டான மாணவி முஸ்கான்!

By
Google Oneindia Tamil News

சென்னை: ஹிஜாப் அணிந்து வந்து ஒற்றையாளாக அல்லாஹூ அக்பர் என்று கோஷமிட்ட பெண்ணை சமூக வலைதளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் மண்டியாவில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை இந்துத்துவா மாணவர்கள் முற்றுகையிட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து துணிச்சலுடன் புர்கா அணிந்து சென்ற பெண்ணை சமூக வலைதளங்களில் பலர் பாராட்டி வருகின்றனர். அந்தப் பெண்ணின் தைரியம் பலருக்கும் ரோல் மாடலாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

கொழுந்தனோடு கள்ளக்காதல்.. தங்கையையும் 3 குழந்தைகளையும் அடித்தே கொன்ற அக்கா! ஷாக்கில் கர்நாடகாகொழுந்தனோடு கள்ளக்காதல்.. தங்கையையும் 3 குழந்தைகளையும் அடித்தே கொன்ற அக்கா! ஷாக்கில் கர்நாடகா

கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணைப் பார்த்து, ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டனர் இந்துத்வா மாணவர்கள். அதற்கு அந்த மாணவியும் தைரியமாக பதிலுக்கு அல்லா ஹூ அக்பர் என்றார். அதையடுத்து, அந்த மாணவியையும் ஆசிரியர்கள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

 சமூக வலைதளம்

சமூக வலைதளம்

முஸ்கான் என்ற அந்த பள்ளி மாணவிக்கு, நாடு கடந்தும் பல்வேறு ஆதரவுக் குரல்கள் வந்துகொண்டிருக்கின்றன. துணிச்சலுடன் அவர் செயல்பட்டதாக சமூக வலைதளத்தில் பலர் பாராட்டி வருகின்றனர். முஸ்கான் குறித்து பேச்சு வைரலாகி வருகிறது. மேலும் தன்னை தாக்க வந்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முஸ்கான் தெரிவித்திருக்கிறார்.

இங்கேயும் அது நிகழும்

இங்கேயும் அது நிகழும்

முஸ்கான் குறித்து மனநல மருத்துவர் ஆர்.கே.ருத்ரன் அவருடைய கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ''அவளை வணங்குகிறேன்.சின்னப் பெண், சுற்றி வெறிமிகுந்த கூட்டம். அவள் எதிர்க்குரல் எழுப்புகிறாள். பொறுக்கித்தனத்தைக் கண்டிக்காமல் அவள் எழுப்பிய கோஷத்தை விமர்சிக்கும் கூட்டம் வாய் திறந்து இப்படி வாந்தி எடுக்கும் அளவு ஒரு சமூக நோயை வளர விட்டிருக்கிறோம். ஒரு சமூகம் கீழ்மைக்குள் மூழ்கிக்கொண்டிருக்கிறது. கலவரம் வரலாம் எனும்போது கடையடைப்பு நடக்கும். ஆனால் பள்ளிகள் கல்லூரிகள் மதக்கலவரம் வரும் என்று மூடுவது அரசின் கேவலம். அங்கே சரியில்லை என்று இங்கிருந்து கூவலாம், இங்கேயும் அது நிகழும் என்பது நிஜம்.

பெருகும் புண்

பெருகும் புண்

முப்பதாண்டுகள் வெட்டிப்பேச்சு, வாய்ச்சவடால் என்று கண்முன்னே ஒரு சிறு கீறல் சீழ் பெருகும் புண்ணாகும் அளவு காலத்தை வீணடித்திருக்கிறோம். அந்தப் பொறுக்கிகள் அந்தச் சின்னப் பெண்ணிடம் செய்த கேவலமான கொடூரமான செயலுக்கு அவள் பின் வாங்காமல், பயமில்லாமல் திரும்பி அவர்களுக்கு எதிர் கோஷம் போட்ட அறச்சினம், தைரியம் நமக்கும் இருந்தால் இன்னொரு இத்தகைய நிகழ்வு வராத அளவு எதிர்ப்போம்.
அவள் குழந்தை, அவளுக்கிருக்கும் அறச்சினம், தைரியம் நமக்கும் இருந்தால் முகநூல் விருப்பக்குறி எதிர்பார்க்காமல் எதிர்ப்போம். இப்படி வெறி மிருகங்கள் என்னைச் சூழும் போது, அனிச்சையாக நான் என் தேவியை அழைப்பேன், அப்போது அவள் பெருமையை அந்தக் குழந்தை கூவியதைப் போல் அல்லாஹூ அக்பர் என்றும் உரக்க அழைப்பேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

அம்மாவின் வேண்டுகோள்

அம்மாவின் வேண்டுகோள்

முஸ்கான் மனநிலை எப்படி இருந்திருக்கும் என அம்மாவின் வேண்டுகோளாக குணா என்பவர் முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில், ''அந்தக் குழந்தைக்கு இருக்கும் துணிச்சலில் பாதி கூட எனக்கு இருந்திருக்காது. பாக்கவே நடுக்கமா இருக்கு. எப்படி ஒரு Cornering. சத்தமா இப்படி வெறி பிடிச்ச மாதிரி கத்துனா, வெறிக்கோஷம் போட்டா அவளை பயமுறுத்தி, ஒடுக்கிடலாம்னு ஒரு நினைப்புதானே இது. இது என்ன இப்போ திடீர்னு நடந்திருக்குமா? இப்படி இந்த காட்டுமிராண்டிகள் கூடவே தினமும் படிச்சிக்கிட்டு இருக்குற அந்த குழந்தைகளுக்கு யார் மேல நம்பிக்கை இருக்கும்? தினமும் காட்டுக்குப் போய் படிச்சிட்டு வீட்டுக்குப் போறாங்க.

நம்பிக்கை இல்லை

நம்பிக்கை இல்லை

மொத்தமா மாநிலம் முழுக்க இப்படி ஸோம்பி பெரும்பான்மையா மாறியிருந்தாதான், இவ்வளவு கேஷுவலா இது நடந்திருக்க முடியும். எல்லோரும் சேர்ந்து ஊளையிடும்போது, அந்த சின்ன மனசுக்கு என்ன தோணும்? வாழ்க்கையை வாழ நம்பிக்கை கொடுக்காத ஒரு பள்ளிக்கூடம். அதைத்தாங்கி நிக்குறதுக்கு ஒரு அரசு. We are failing until we allow these morons in society and government. எந்த Support-உம் பண்ணாம சங்கித்தனமா இருக்குற ஆட்களைக் கூட மறந்துடுங்க. அதுங்களை மொத்தமா புறக்கணிக்கணும். அந்த வெறிக்கூட்டத்துக்கு அல்லா ஹு அக்பரையே பதிலா சொல்ற குழந்தையை விமர்சிக்கிற லிபரல்களை மட்டும் செருப்பாலயே அடிங்க.. குழந்தைகளை இந்த சங்கி நாய்கள் கிட்ட விட்டுட்டு சாகணுமா? Have Fear. Act Against this Morons In Everyway. Please'' என்று பதிவிட்டுள்ளார்.

Recommended Video

    Hijab எங்கள் உரிமை - Thowheed Jamath Protest | Oneindia Tamil
    அறச்சீற்றம்

    அறச்சீற்றம்

    பத்திரிக்கையாளர் அதிஷா வினோத் ''அல்லாஹூ அக்பர் என்கிற அந்த சிறுமியின் முழக்கம் எதிர்ப்புணர்வின் வெளிப்பாடு. அது மதவுணர்வால் தூண்டப்பட்ட ஒன்றல்ல. அது எவ்வகையிலும் தன் மதப்பெருமைக்காக எழுந்த ஒன்றல்ல. ஜெய்ஸ்ரீராம் என்கிற அயோக்கியர்களின் மிரட்டல்களை எதிர்த்துக்கிளம்பிய அறச்சீற்றம் அது. எனக்கு இறைநம்பிக்கை இல்லை. இருப்பினும் அந்த மகளோடு என்னை இணைத்துக்கொள்ளவே விரும்புகிறேன். அதை ஒரு இறைமுழக்கமாக அல்லாமல் பிணந்தின்னிகளை எதிர்க்க வேண்டியதன் அடையாளமாக முழங்க விளைகிறேன். அல்லாஹூ அக்பர்'' என பதிவிட்டுள்ளார்.

    English summary
    Many people on social media are praising the woman who came wearing Hijab and chanted "Allahu Akbar" alone in Udupi college, Karnataka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X