‘மஞ்சள்’ கொடி காட்டிய மாஜிக்கள்.. அந்த ஒரே ஒரு விஷயத்துக்காகத்தான் வெய்ட்டிங்.. கலக்கத்தில் ஈபிஎஸ்!
சென்னை : அதிமுகவை கைப்பற்றும் வகையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களை இழுக்க ஓபிஎஸ், சசிகலா இணைந்து ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதால், முன்னாள் அமைச்சர்கள் பலர் சைலண்ட் மோடுக்கு போய்விட்டனர். பலர், ஓபிஎஸ் அணிக்குத் தாவ மஞ்சள் கொடியோடு தயாராக நிற்பதாகக் கூறப்படுகிறது.
ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் ஓரணியில் திரள்வதால், பல எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ் பக்கம் தாவ தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், எடப்பாடி பழனிசாமியின் பேஸ்மெண்ட் ஆட்டம்கட்டிருப்பதால், முன்னாள் அமைச்சர்கள் பலர் இப்போது அடக்கி வாசிக்கும் முடிவுக்கு வந்துள்ளனராம்.
பொதுக்குழு வழக்கு தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக வந்த நிலையில், மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வருவதைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கையை பல 'மாஜிக்கள்' மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்
அதிமுக பொதுக்குழு வழக்கில் ஐகோர்ட் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு கட்சியை கைப்பற்றி விட்டோம் என்ற நினைப்பில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு இடியாக வந்து இறங்கியது. அதைத்தொடர்ந்து மீண்டும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார். சசிகலா, டி.டி.வி.தினகரனுக்கும் ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸுடன் ஒருபோதும் இணைந்து பணியாற்ற முடியாது என்று அறிவித்தார். அதே கையோடு, ஓபிஎஸ்-க்கு சாதகமான தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

ரகசிய பேச்சுவார்த்தை
இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு விரைவில் வர உள்ளது. இந்த நிலையில் தனக்கு கிடைத்த சாதகமான விஷயத்தைப் பயன்படுத்தி அதிமுகவை கைப்பற்றும் முடிவில் ஓபிஎஸ் இறங்கியுள்ளார். இதற்கு டெல்லி பாஜக தலைமையும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். ஓபிஎஸ் உடன் சசிகலா தனக்கு நெருக்கமான பெண் நிர்வாகி ஒருவர் மூலம் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

பக்கா ஸ்கெட்ச்
சசிகலா - ஓபிஎஸ் கூட்டணி இணைவதன் மூலம் தென் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தாங்கள் சார்ந்துள்ள சமூகத்தினரை தங்கள் பக்கம் இழுப்பதற்காக நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. ஈபிஎஸ் ஆதரவாளர்களை இழுக்கும் முயற்சியில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோரை ஓபிஎஸ் களம் இறக்கியுள்ளார். இவர்கள் ஈபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எம்.எல்.ஏக்கள்
உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன், ஓபிஎஸ் அணிக்குத் தாவியது எடப்பாடிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல, தென் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இருவருடனும் ஓபிஎஸ் தரப்பினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். அவரும் ஓபிஎஸ் பக்கம் வர ஓகே சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல ஈபிஎஸ் ஆதரவாளர்களாக இருக்கும் பல எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ், சசிகலா தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

மவுனம் காக்கும் மாஜிக்கள்
இதனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகப் பேசி வந்த பல முன்னாள் அமைச்சர்கள் தற்போது மவுனம் காக்கத் தொடங்கியுள்ளனர். மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பும், ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக வந்தால், பலர் அவர் பக்கம் தாவி விடுவார்கள். ஓபிஎஸ் கை ஓங்கினால், ஈபிஎஸ்ஸுக்காக குரல் கொடுத்த நம் பாடு திண்டாட்டமாகிவிடும், எனவே, இப்போது 'அமைதியோ அமைதி' மோடில் இருப்பதே நல்லது என முடிவு செய்திருக்கிறார்களாம்.

மஞ்சள் கொடி
மேலும், ஓபிஎஸ் தரப்பிலிருந்து தொடர்பு கொண்டவர்களிடம் பல முன்னாள் அமைச்சர்கள், முடியாது என மறுதலிக்காமல், இரண்டு பக்கமும் தலையை ஆட்டியுள்ளனராம். அதாவது, பொறுத்தது பொறுத்துவிட்டோம், இந்த தீர்ப்பு வரட்டும், மொத்தமாக ஆதரவாளர்களோடு வந்துவிடுகிறோம் என தாவத் தயாராக இருப்பதற்கான 'மஞ்சள்' கொடியை காட்டியுள்ளனராம். இதனை ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஓபிஎஸ்ஸிடம் தெரிவிக்க, அவரும் உற்சாகமாகியுள்ளார்.

ஈபிஎஸ் கலக்கம்
இது, எடப்பாடி தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை பொறுத்துத்தான் தங்கள் அணியைச் சேர்ந்த பல சீனியர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்பதால், எடப்பாடி பழனிசாமி கையைப் பிசைந்து கொண்டிருக்கிறாராம். தொடர்ந்து, பல சீனியர்களுடனும் பேசி, தனது ஆதரவைத் தக்கவைக்கும் முயற்சிகளில் ஈடுபட அறிவுறுத்தி உள்ளாராம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications