சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிஸ்ஸாக கூடாது.. இனிதான் "கச்சேரியே".. செஸ் ஒலிம்பியாட் ஓவர்.. பெரிய முடிவு எடுக்க போகும் ஸ்டாலின்?

Google Oneindia Tamil News

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடர் காரணமாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் டாப் அதிகாரிகள் பலர் உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான முடிவு ஒன்றை வரும் நாட்களில் எடுக்க உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

    Chess Olympiad நிறைவு விழாவில் Africa பாடகரின் Chess Anthem *Sports | Oneindia Tamil

    செஸ் ஒலிம்பியாட்டின் 44வது தொடர் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. நேற்று இதன் நிறைவு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த தொடரை சர்வதேச செஸ் வீரர்கள் பலரும் பாராட்டி உள்ளனர்.

    இதுவரை இப்படி ஒரு தொடரை நாங்கள் பார்த்ததே இல்லை. செஸ் ஒலிம்பியாட் தொடர்களில் இதுதான் பெஸ்ட். உலகில் வேறு எங்கும் இவ்வளவு சிறப்பாக செஸ் ஒலிம்பியாட் தொடர் நடந்ததே இல்லை என்று பாராட்டி உள்ளனர்.

    நேற்று நிறைவு விழாவிலும் செஸ் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    நீலகிரி,கோவையில் மிக கனமழை..6 மாவட்ட மக்களே உஷார்.. எச்சரிக்கும் வானிலை மையம் நீலகிரி,கோவையில் மிக கனமழை..6 மாவட்ட மக்களே உஷார்.. எச்சரிக்கும் வானிலை மையம்

     ஸ்டாலின் நன்றி

    ஸ்டாலின் நன்றி

    இந்த நிகழ்வு முடிந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் பலருக்கும் நன்றி தெரிவித்து ட்விட் செய்தார். பிரதமர் மோடி, அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், செஸ் வீரர் விசுவநாதன் ஆனந்த், இயக்குநர் விக்னேஷ் சிவன், சென்னை போலீசார், இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், நடிகர் கமல்ஹாசன் என்று பலருக்கும் நன்றி தெரிவித்து ட்விட் செய்தார். இந்த நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடந்த உதவியாக இருந்த எல்லோருக்கும் முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

    ஹேப்பி

    ஹேப்பி

    உலகமே வியக்கும் விதத்தில் இந்த தொடரை நடத்தியதில் முதல்வர் ஸ்டாலின் ஹேப்பியாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளையும் அழைத்து முதல்வர் பாராட்டியதாக கூறப்படுகிறது. ஒரு சர்வதேச தொடரில்.. எந்த விதமான சின்ன புகாரும் அளிக்கப்படாமல் ஒரு தொடரை நடத்துவது என்பது சாத்தியமே இல்லை. ஆனால் அதை தமிழ்நாடு அரசு நடத்திக் காட்டியதால் முதல்வர் ஸ்டாலின் ஹேப்பி என்று கூறப்படுகிறது.

    என்ன திட்டம்?

    என்ன திட்டம்?

    இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் விரைவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் தொடருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் 30 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வரை வேலை பார்த்தனர். இவர்களில் சிலர் முதல்வர் ஸ்டாலினை அதிகம் கவர்ந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு குட் மார்க் கொடுக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் அவர்களை முக்கிய பொறுப்பிற்கு மாற்ற உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

     பெரிய முடிவு

    பெரிய முடிவு

    இதில் சிலருக்கு பெரிய பொறுப்புகள் வழங்கப்படும் என்று ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது போக சில ஐஏஎஸ் அதிகாரிகள் மீது புகார்கள் வந்துள்ளன. இவர்கள் செஸ் ஒலிம்பியாட்டில் பணியாற்றியவர்கள் கிடையாது. வேறு வேறு துறைகளில் உள்ளவர்கள். முக்கியமாக சிலர் தங்கள் துறை அமைச்சர்களுடன் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்களை வேறு துறைக்கு மாற்றவும், காத்திருப்பு பட்டியலில் வைக்கவும் முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளார் என்கிறார்கள்.

    மிஸ்ஸாக கூடாது

    மிஸ்ஸாக கூடாது

    லோக்சபா தேர்தல் 2024ல் நடக்க உள்ள நிலையில் ஆளும் திமுக இதற்காக தயாராக உள்ளது. இதற்காக திமுக பல வாக்குறுதிகளை வரும் நாட்களில் தொடர்ச்சியாக நிறைவேற்ற உள்ளது. இதில் எந்த தவறும் நடக்க கூடாது. எங்கேயும் எதுவும் மிஸ்ஸாக கூடாது என்று ஆளும் திமுக தரப்பு நினைக்கிறதாம். இதற்கு வசதியாக இருக்கும் வகையில் ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்ற முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. தனது தனி செயலாளர்கள் உட்பட பலரை முதல்வர் ஸ்டாலின் வரும் நாட்களில் மாற்றி உத்தரவிடுவார் என்று தகவல்கள் வந்துள்ளன.

    English summary
    Sources say that few IAS officers to be transferred to soon ro various departments by CM Stalin soon. செஸ் ஒலிம்பியாட் தொடர் காரணமாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் டாப் அதிகாரிகள் பலர் உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X