• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சொல்ல முடியாத வேதனையில் சீனியர்கள்.. வளர்த்து விட்ட விழுதுகளை நசுக்கலாமா.. அதிகரிக்கும் புலம்பல்!

|

சென்னை: சொல்ல முடியாத வேதனையில் பொருமிக் கொண்டிருக்கிறார்கள் திமுகவின் சில சீனியர்கள்.. காரணம் சாட்சாத் ஸ்டாலின்தான்..!

கலைஞர் இருந்தபோது, உட்கட்சி பூசல் இருக்கத்தான் செய்தது.. ஆனால், அந்த பூசலை அவர் வளரவே விடமாட்டார்.. உடனடியாக சம்பந்தப்பட்ட 2 தரப்பையும் அழைத்து பேசுவார்.. சமாதானம் செய்வார்..

இதனால்தான் 50 வருடமாக கட்டுக்கோப்புடன் திமுக திகழ்ந்து வருகிறது... அதுமட்டுமல்ல ஒரு சாதாரண தொண்டனின் உணர்வையும் கலைஞர் அறிந்து வைத்திருப்பார்.. சில சமயம், பழம்பெரும் தொண்டர்களின் பெயரையும் அழைத்து அவர்களை திக்குமுக்காட செய்து விடுவார்.

"மேடம், ப்ளீஸ்".. அடக்க முடியாமல் சிரித்த பிரேமலதா.. "ஒத வாங்குவே" மாணவரை பாசத்தோடு கண்டித்து.. செம!

கட்சி

கட்சி

இப்போது நிலைமை அப்படி இல்லை.. எல்லாமே தலைகீழாகிவிட்டது.. ஆனால், உள்கட்சி பூசல் மட்டும் அதிகமாகி கொண்டே வருகிறது.. அன்றைய நாட்களில் நிர்வாகிகளுக்குள் கருத்து மோதல், ஆதங்கங்கள் ஏற்பட்டு பூசல் அதிகரிக்கும்.. இப்போது கட்சி தலைவர் மீதே அந்த ஆதங்கங்கள் யூ-டர்ன் அடித்து வருகின்றன... காரணம், ஸ்டாலின் செயல்பாடுகள்தான்.. தன்னை மட்டுமே கட்சிகளில் முன்னிறுத்தி, மற்றவர்களை வெளிச்சம் போட்டு காட்ட தயங்குவதாக கூறப்படுகிறது.

 அறிக்கை

அறிக்கை

போன வருஷம் டிசம்பர் மாதம், ஸ்டாலின் ஒரு அறிவிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், போஸ்டர்கள், கட்-அவுட்கள், பேனர்கள் போன்றவற்றில், எதிலும் பெரியார், அண்ணா, கலைஞர், கழகத் தலைவர் தவிர வேறு யாருடைய படங்களும் இடம்பெறக் கூடாது என்று கட்சி உறுப்பினர்களுக்கு கூறியிருந்தார்.

சீனியர்கள்

சீனியர்கள்

இதுதான் நிர்வாகிகளை மேலும் அப்செட் ஆகிவிட்டது.. ஏனென்றால், ஸ்டாலினை இப்படி தலைமையில் அமரவைத்து அழகு பார்த்ததே திமுகவின் மூத்த தலைவர்கள்தான்.. இந்த தலைகள் மட்டும் இல்லாவிட்டால், திமுக, இன்றைக்கு அசுர வளர்ச்சியை பெற்றிருக்க முடியாது.. இதுவும் ஒருவேளை ஐபேக் டீமின் ஐடியாவாக இருக்கலாம் என்கிறார்கள்.

அப்செட்

அப்செட்

இத்தனைக்கும் கட்சியில் துரைமுருகன், டிஆர் பாலு, பொன்முடி, ஆர்எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், திருச்சி சிவா,கேஎன் நேரு , ஆ ராசா, கனிமொழி உட்படபல முன்னணி, மூத்த தலைவர்கள் உள்ளனர். ஆனால், திமுகவின் எல்லா முடிவுகளையும் மற்ற தலைவர்களை ஆலோசிக்காமல் ஸ்டாலின் மட்டுமே எடுத்து வருகிறார்... இதுவும் சீனியர்களின் அப்செட்டுக்கு இன்னொரு காரணமாம்..

 உதயநிதி

உதயநிதி

இதுவாவது பரவாயில்லை, தலைவரின் தன்னிச்சை முடிவு என்று எடுத்து கொள்ளலாம், ஆனால், மூத்த தலைவர்களை மதிக்காமல் உதயநிதிக்கு பிரதிநிதித்துவம் அளித்ததுதான் உச்சக்கட்ட அப்செட்டில் சீனியர்களை கொண்டுவந்து விட்டு விட்டது. இன்னொரு உதாரணம், துறைமுகம் பகுதியில் கடந்த வாரம் நடந்த கட்சி நிகழ்ச்சியில் மின்விளக்கு அலங்காரத்தில் ஸ்டாலின்,கலைஞர், அண்ணா ஆகியோர் முகங்கள் பொறிக்கப்பட்டிருந்தது.

 ஸ்டிக்கர்கள்

ஸ்டிக்கர்கள்

திமுக உருவாக காரணமாக இருந்த திராவிடர் கழகத்தை உருவாக்கிய பெரியாரை காணோமாம்.. இதை பார்த்து அதிர்ந்தே விட்டனர் கட்சியினர். சின்ன சின்ன ஸ்டிக்கர் முதல் பிரச்சார கூட்டங்கள் வரை தன் படங்களை மட்டுமே பிரதானப்படுத்தி வருவதும், பெருமை பெற்ற பெரியார், அண்ணா போன்ற தலைவர்களையும் திமுக மறந்துவிட்டதும் ஏற்க முடியாதது என்கிறார்கள்...

 உதயசூரியன்

உதயசூரியன்

வடநாட்டில் இருந்து ஆட்களை கொண்டு வந்தால், நம் தமிழக தலைவர்களின் மதிப்பெல்லாம் அவர்களுக்கு எப்படி தெரியும்? ஆனால், ஒன்று தமிழகத்தின் மாபெரும் அரசியல் இயக்கமாக விளங்கியது இந்த திமுக.. பளிச்சென்று ஜொலித்த சூரியன், கருணாநிதிக்கு பிறகு, மதிப்பும்,முன்னேற்றமும் அஸ்தமிக்கும் சூரியனை போல மங்கி கொண்டிருக்கிறது.

English summary
Sources say that, some DMK seniors are said to be dissatisfied with MK Stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X