சென்னைவாசிகள் கவனத்திற்கு.. புறநகர் ரயிலில் பயணிக்க இனி இதை செய்தாகணும்.. ரயில்வே முக்கிய அறிவிப்பு
சென்னைவாசிகள் கவனத்திற்கு.. புறநகர் ரயிலில் பயணிக்க இனி இதை செய்தாகணும்.. ரயில்வே முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. . நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 10,00-ஐ நெருங்கி வருகிறது. ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தொடர்ந்து அடங்காமல் திரியும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தினமும் இரவு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் பஸ்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டது. மெட்ரோ ரயில் சேவையும் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டது. அதே வேளையில் சென்னை புறநகர் மின்சாரா ரயில்கள் குறைந்தளவு இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்தது.

2 டோஸ் தடுப்பூசி அவசியம்
சென்னை - அரக்கோணம், சென்னை - கும்மிடிப்பூண்டி, சென்னை - வேளச்சேரி, சென்னை - செங்கல்பட்டு வழித்தடங்களில் புறநகர் ரயில்கள் வழக்கம் போல இயக்கப்பட உள்ளன. இந்த நிலையில் சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது 2 டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க முடியும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

மாஸ்க் இல்லையென்றால் ரூ.500 அபராதம்
இதேபோல் புறநகர் ரயிலில் மாஸ்க் அணியாமல் பயணித்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாமல் ரயில் நிலையத்தில் சுற்றினாலும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் புறநகர் ரயிலில் செல்பவர்கள் வருகிற 31-ம் தேதி வரை UTS செயலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எப்போது அமலுக்கு வரும்?
இந்த கட்டுப்பாடுகள் ஜனவரி 10-ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது. தெற்கு ரயில்வேயின் புதிய கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது மிக கடுமையான அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் சிலர் கூறினார்கள். சென்னைவாசிகளின் முதுகெலும்பே புறநகர் மின்சார ரயில்கள்தான் என்பது குறிப்பிட்டத்தக்கது.












Click it and Unblock the Notifications