10வது மாடியில் வேலுமணி.. "அடிமடியிலேயே" கை வைத்த திமுக.. கலக்கத்தில் புள்ளிகள்.. என்ன நடக்கிறது?
எஸ்பி வேலுமணியிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது
சென்னை: எம்எல்ஏ ஹாஸ்டலில் 10வது பத்தாவது மாடியில் வேலுமணியிடம் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறது போலீஸ்.. அதேசமயம், எஸ்பி வேலுமணியின் பினாமிகளுக்கு லேசான கலக்கமும் சூழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சம்மந்தப்பட்ட இடங்களில் ரெய்டுகளும், அதையொட்டிய விசாரணைகளும், அதற்கு கண்டனங்களும் என தமிழக அரசியல் களம் தகித்து காணப்படுகிறது.
சென்னையில் மட்டுமே 15 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.. இதையடுத்து, சென்னை எம்எல்ஏ ஹாஸ்டலில் வேலுமணியிடமும் அதிகாரிகள் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.. இங்குதான் தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவான வேலுமணிக்கு ஒதுக்கப்பட்ட ரூம் உள்ளது..

அதிகாரிகள்
நடந்து வரும் இந்த பரபரப்பு ரெய்டு சம்பந்தமாக 2 விதமான தகவல்கள் கசிந்து வருகின்றன.. வேலுமணியிடம் ரெயிடு நடத்துவது நேற்றே முடிவான ஒன்று என்கிறார்கள்.. அதனால்தான், எம்எல்ஏ ஹாஸ்டலில் வேலுமணி இருப்பதை நேற்றிரவே உறுதிப்படுத்திக்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று காலையிலேயே அதாவது 6 மணிக்கே அங்கு சென்றுவிட்டனராம்... ஸ்ட்டிரைட்டாகவே வேலுமணி ரூமுக்குள்தான் அந்த டீம் நுழைந்துள்ளது..

வேலுமணி
இந்த விஷயம் கேள்விப்பட்டு, சிவி சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் எம்எல்ஏ ஹாஸ்டலுக்கு விரைந்துள்ளனர்.. ஆனால் அவர்களை போலீஸ் தரப்பு உள்ளே விடவில்லை.. பிறகு காரசாரமான வாக்குவாதங்கள் நடந்ததையடுத்து, ஹாஸ்டல் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.. ஆனால், வேலுமணியின் ரூமுக்குள் யாரையுமே போலீஸ் விடவில்லையாம்.

பரபரப்பு
அதேபோல, ஆனால், காலையில் வேலுமணியிடம் ரெய்டு என்று செய்திகள் வெளிவந்ததும், கோவை அதிமுகவினர் பரபரப்படைந்து அவர் வீட்டில் குவிந்துள்ளனர்.. பிறகுதான் வேலுமணி சென்னையில் இருப்பது உறுதியாகி உள்ளது.. ஆனாலும் அங்கேயும் ரெய்டு நடப்பதால், அதிமுகவினர் ஒவ்வொருவராக வர தொடங்கினர்.. இதையடுத்து போலீசாரும் குவிக்கப்பட்டுவிட்டனர்..

உணவு பொட்டலம்
ஒருகட்டத்தில் அதிமுகவினருக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதமும் நடந்தது.. ரெய்டு நடப்பதை கண்டித்து அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்நிலையில்தான், போராடுபவர்களுக்கு உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டது.. சாப்பிட்டு கொண்டே தங்கள் போராட்டத்தை அதிமுகவினர் அங்கு தொடர்ந்து வருகின்றனர்.

ஹேஷ்டேக்
இதன் தாக்கமாக, வேலுமணிக்கு எதிராக "ஊழல்மணி வேலுமணி" என்ற ஹேஷ்டெக்குகள் டிரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன... அந்த ஹேஷ்டேக்கில் பலரும் திரண்டு வந்து, அதிமுக அரசுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டதுடன், திமுகவின் செயல்பாடுகளையும் பாராட்டி வருகின்றனர்.

அரசு வேலை
இந்த ரெய்டின் மற்றொரு தாக்கமாக, அரசு வேலையில் இருக்கும் சில பினாமிகளுக்கு உள்ளுக்குள் உதறல் ஏற்பட்டுள்ளதாம்.. அடுத்து நாமதானோ, நம்ம வீடுகளுக்கும் ரெய்டு வருமோ என்ற கிலியில் உறைந்துள்ளனராம்.. குறிப்பாக, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் வேலுமணியின் பினாமிகளாக செயல்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு எல்இடி விளக்கு பொருத்தியது உள்ளிட்ட பல கான்டிராக்டர்களை எடுத்து செயல்பட்டவர்களுக்குதான் கலக்கம் சூழ்ந்துள்ளதாம்..
Recommended Video

யார் அவர்கள்?
இதில் சிலர் நன்றாக சம்பாதித்து செட்டில் ஆகி உள்ளனர்.. மேலும் சிலர் இப்போதும் பினாமியாக உள்ளனராம்.. இவர்கள் மொத்த பேருமே நடுநடுங்கி போயுள்ளதாக தெரிகிறது. இதனால், சில முக்கிய ஆவணங்களை இடம் மாற்றும் முயற்சியிலும் இறங்கி வருவதாக தகவல்கள் கூறுகின்றன... ஆனால் அவர்கள் எல்லாம் யார் என்று உறுதியாக தெரியவில்லை.

திமுக உறுதி
பழிவாங்கும் படலம் என்ற வழக்கமான வாதத்தை அதிமுக தரப்பு முன்வைத்து இந்த பிரச்சனையை திசை திருப்ப முயன்றுவருகிறது.. ஆனால், வேலுமணி விஷயத்தில் ஆதாரங்களை வலுவாக சேகரித்து கொண்டே திமுக, சாட்டையை கையில் எடுத்துள்ளது கவனிக்கத்தக்க அம்சமாகும்.. ஆக மொத்தம் வேலுமணி & கோவிடம் நடத்தப்பட்டு வரும் ரெயிடினால், தமிழகமே தகித்து காணப்படுகிறது..!
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications