போட்றா வெடிய.. தீபாவளி கொண்டாட்டம் ஸ்டார்ட்! இன்று சென்னை தீவுத் திடலில் தொடங்கும் பட்டாசு விற்பனை
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தேர்தல் பிரசார கூட்டத்தில் நடந்த 'மொழிபெயர்ப்பு' விவகாரம் அம்மாநில தேர்தல் களத்தில் பரபரப்பான பேசு பொருளாகி இருக்கிறது.
தெலுங்கானா சட்டசபைக்கு நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே போட்டி உள்ளது. தெலுங்கானா தேர்தல்களைப் பொறுத்தவரை பிஆர்எஸ், காங்கிரஸ் கட்சிகள் கணிசமான இடங்களைப் பெற்றாலும் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்புள்ளது என்கின்றன கருத்து கணிப்புகள்.

தெலுங்கானாவில் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது டிகே சிவகுமார் பேசியதாவது: முதல்வர் சந்திரசேகர ராவ், அவரது குடும்பத்தினர் மற்றும் பிஆர்எஸ் கட்சியினரை தெலுங்கானா எல்லையில் உள்ள கர்நாடகா கிராமங்களுக்கு அழைத்து செல்கிறேன். கர்நாடகா தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றி இருக்கிறது என்பதை பொதுமக்கள் உங்களுக்கு விளக்கம் தருவார்கள். ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள் நாங்கள் வாக்குறுதியளித்த அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டன என்பதை உறுதியாக என்னால் கூற முடியும். ஆனால் நீங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா?
கர்நாடகாவின் ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை விட காங்கிரஸ் கட்சியானது தெலுங்கானாவில் தந்துள்ள 6 வாக்குறுதிகள்தான் அற்புதமானவை. தெலுங்கானாவில் புதிய காங்கிரஸ் அரசு டிசம்பர் 9-ந் தேதி அமைந்த உடன் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே 6 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றார்.
டிகே சிவகுமார் ஆங்கிலத்தில் பேசியதை தெலுங்கில் மொழி பெயர்த்த காங்கிரஸ் பிரமுகர், தெலுங்கானாவில் முதல்வராக ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்ற உடன் முதல் கையெழுத்தே 6 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதான் என கூறினார்.
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளர் என யாரையும் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதனால் டிகே சிவகுமாரும், பொதுவாக தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் என குறிப்பிட்டார். ஆனால் மொழிபெயர்த்த காங்கிரஸ் பிரமுகரோ, ரேவந்த் ரெட்டிதான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்தது இப்போது பேசு பொருளாகி இருக்கிறது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications