ஆவடி அருகே நகைக் கடை ஓனரை கட்டி போட்டு துப்பாக்கி முனையில் ரூ 1. கோடி கொள்ளை.. 2 பேர் கைது
சென்னை: சென்னை ஆவடி அருகே துப்பாக்கி முனையில் ரூ 1.15 கோடி நகையை கொள்ளையடித்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ராஜஸ்தானை சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ஆவடியை அடுத்த முத்தாப்புதுப்பேட்டை எல்லையம்மன் நகர் ஐஏஎஃப் சாலையைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கிருஷ்ணா ஜுவல்லர்ஸ் என்ற நகைக் கடையையும் அடகு கடையையும் நடத்தி வருகிறார்.

கடந்த 15 ஆம் தேதி பிரகாஷ் மட்டும் தனியாக இருந்தார். அப்போது காரில் வந்த 4 மர்மநபர்கள் திடீரென கடைக்குள் புகுந்தனர். அப்போது பிரகாஷின் கை, கால்களை கட்டிப் போட்டு துப்பாக்கி முனையில் மிரட்டி நகைக் கடையில் இருந்து ரூ 1.15 கோடி மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி, ரூ 5 லட்சம் பணம் மற்றும் ஐபோன் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடினர்.
இந்த சம்பவம் தொடர்பாக முத்தாபுதுப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் துப்பாக்கியை காட்டி நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற 4 பேரின் சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து தேடி வந்தனர்.
கொள்ளையர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாக தினேஷ்குமார், சேத்தன்ராம் ஆகியோரை சென்னையில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் சவுகார்பேட்டையில் தங்கியிருந்தனர், கொள்ளையர்கள் தங்குவதற்கு இவர்கள் அடைக்கலம் கொடுத்ததாக தெரிகிறது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர் என போலீஸார் தெரிவித்தனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications