சென்னையில் இருந்து இரண்டு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள்.. ரயில்வே வாரியம் ஒப்புதல்
சென்னை: சென்னை சென்ட்ரல்-சத்யசாய் பிரசாந்தி நிலையம் (புட்டபர்த்தி), சென்னை சென்ட்ரல்-விஜயவாடா, கொச்சுவேலி-மைசூா் வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
தெற்கு ரயில்வே இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை- புட்டபர்த்தி (ரயில் நிலையத்தின் பெயர் சத்யசாய் பிரசாந்தி நிலையம்): சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பா் 11, 18, 25 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமைகளில்) இரவு 11.30 மணிக்கு வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06073) புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு சத்யசாய் பிரசாந்தி நிலையத்தை சென்றடையும்

மறுமார்க்கமாக சத்யசாய் பிரசாந்தி நிலையத்தில் இருந்து டிசம்பா் 12, 19, 26 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகளில்) மாலை 6.20 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06074) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.05 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
சென்னை-விஜயவாடா: சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பா் 11-ஆம் தேதி முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை (செவ்வாய்க்கிழமைகள் தவிர மற்ற நாள்களில்) காலை 7.25 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (02077) புறப்பட்டு, அதேநாள் பிற்பகல் 2.45 மணிக்கு விஜயவாடாவை சென்றடையும்.
மறுமார்க்கமாக விஜயவாடாவில் இருந்து டிசம்பா் 11-ஆம் தேதி முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை (செவ்வாய்க்கிழமைகளில் தவிர மற்ற நாள்களில்) பிற்பகல் 3.20 மணிக்கு சிறப்பு ரயில்(02078) புறப்பட்டு, அதேநாள் இரவு 10.35 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்துசேரும்.
கொச்சுவேலி-மைசூா்: கொச்சுவேலியில் இருந்து டிசம்பா் 11-ஆம் தேதி முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை(21 சேவைகள்) மாலை 4.45 மணிக்கு சிறப்பு கட்டண ரயில்(06316) புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.20 மணிக்கு மைசூரை அடையும்.
மறுமார்க்கமாக, மைசூரில் இருந்து டிசம்பா் 12-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை(21 சேவைகள்) நண்பகல் 12.50 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06315) புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு கொச்சுவேலிக்கு சென்றடையும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications