"டபுள் ஹேப்பி".. பாஜக ரேஸிலேயே இல்லை.. மோடி கிட்டயே உட்கார்ந்து.. அதான் ஸ்டாலின்.. சிவசங்கர் அதிரடி
தமிழக போக்குவரத்து துறை எஸ் எஸ் சிவசங்கர் நம் ஒன் இந்தியாவுக்கு பேட்டி தந்துள்ளார்
சென்னை: கலைஞரை போலவே, உதயநிதி ஸ்டாலினுக்கு டைமிங் சென்ஸ் உள்ளது.. குறிப்பாக எதிராளிகளை கையாளுகிறபோது, சிறிதும் கோபப்படாமல் கையாளுகிறார் என்று அமைச்சர் சிவசங்கர் புகழாரம் சூட்டி உள்ளார்.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர், நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அப்போது, பல்வேறு கேள்விகள் அவரிடம் நாம் எழுப்பினோம்.
கலைஞர் இருக்கும்போது இருந்த திமுக, ஸ்டாலின் இருக்கும்போது எப்படி மாறியிருக்கிறது? உதயநிதி ஸ்டாலின் எப்படி செயல்படுகிறார் என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு சிவசங்கர் தந்த பதில்தான் இது:

கலைஞர்
முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை "நான் கலைஞரை போல எழுத்தாளர் இல்லை, நான் கலைஞரை போல பேச்சாளர் இல்லை.. ஆனால், உழைப்பின் மூலமாக அனைத்தையும் செய்துகாட்ட விரும்புகிறேன் என்று அவரே பலமுறை சொல்லி உள்ளார்.. அதன்படியே, அந்த வார்த்தையை அவர் நிரூபித்து விட்டார்.. ஒரு முதல்வர் இப்படி எல்லாம் உழைக்க முடியும் என்பதை களத்தில் பணியாற்ற முடியும்.. தளத்தில் இருந்து பணியாற்ற முடியும் என்பதை, யாருமே எதிர்பார்த்ததை தாண்டி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்..

தடம் மாறுமோ?
பெரியாரியல் உணர்வாளர்கள், திராவிட இயக்க சிந்தனையாளர்கள், கலைஞர் மறைவுக்கு பிறகு, எந்த அளவுக்கு இதை முன்னெடுப்பார்கள் என்று சந்தேகத்துடன் இருந்தார்கள்.. ஒருவேளை திமுக, தடம் மாறுமோ என்றுகூட நினைத்தார்கள்.. ஆனால், கலைஞரையும் தாண்டி ஒரு படி மேலே நிற்கிறார் ஸ்டாலின்.. எதிர்க்கட்சியாக இருந்தபோது, எந்த கொம்பனாலும் தொட்டுப்பார்க்க முடியாது என்றார்.. இன்றுவரை அதை நிரூபித்து கொண்டிருக்கிறார்.. மோடி உட்கார்ந்திருந்த மேடையிலேயே, இந்த திராவிட மாடல் அரசு என்னன்ன காரியத்தை செய்து கொண்டிருக்கிறது என்பதை பதிவு செய்து, இன்னொரு பக்கம் ஒன்றிய அரசு, இந்த தமிழகத்துக்கு எதை செய்ய தவறுகிறது என்பதை மோடியை வைத்துக் கொண்டே பேசுகிறார்..

கபளீகரம்
மோடிக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மற்ற மாநிலங்களில் யாராக இருந்தாலும், அவர்கள் உள்ளூர் சண்டையில்தான் குரல் கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.. ஆனால், இங்கு அப்படி இல்லை.. பாஜக ரேஸிலேயே இல்லை.. இந்த சூழலில், பாஜகவை எதிர்த்து, மோடியை எதிர்த்து குரல் கொடுக்கிறார் என்றால், சித்தாந்த ரீதியாக இவர்கள் தமிழகத்துக்கு ஒவ்வாதவர்கள்.. மண்ணிற்கு ஒவ்வாதவர்கள்.. ஏமாற்றுகிறார்கள்.. இந்த மண்ணுக்கு கிடைக்க வேண்டியதை எல்லாம் கபளீகரம் செய்கிறார்கள் என்பதை மோடி இருந்த மேடையிலேயே ஓங்கி ஒலித்தவர்..

கலைஞர்
அதனால், கலைஞர் இடத்தை ஸ்டாலின் நிரப்பினாரா என்ற கேள்வியை எழுப்ப தேவையில்லை.. அதற்கான சூழல் இல்லை.. மிக அழுத்தமாக சொல்கிறேன், கலைஞரையும் தாண்டி போய்க் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். உதயநிதியை அரசியலுக்கு வரும்போது, எளிதாக எல்லாரும் கணக்கு போட்டார்கள்.. எதோ சினிமாவில் இருப்பவர், அப்படியே வந்துட்டு, அப்படியே போய்விடுவார் என்று நினைத்தார்கள்.. ஆனால், ஒவ்வொரு விஷயத்திலும் அவர் தன்னை எப்படி ஈடுபடுத்தி கொள்கிறார் என்பதை பார்க்கும்போது மலைப்பாகவே இருக்கிறது..

கருணாநிதி
தேர்தல் பிரச்சாரத்துக்கு போகும்போது, எம்பி தேர்தலில் 30 நாட்களும் ஒருநாளும் அசரவில்லை. முழு பிரச்சாரமும் மேற்கொண்டார்.. சட்டமன்ற தேர்தலிலும் அப்படியேதான் முழுவீச்சில் பிரச்சாரம் செய்தார்.. வெற்றி பெற்று எம்எல்ஏவான பிறகு, ஒரு எம்எல்ஏ இப்படியெல்லாம் செயல்பட முடியுமா என்று வியக்கும் அளவுக்கு தொகுதி முழுவதும் சுற்றி வந்துவிட்டார்.. தெருத்தெருவாக, ஏன் வீடு வீடாக, அதுவும் மழை பாதிப்பு நேரங்களில் அந்த தெருவிலெல்லாம் போக முடியாது.. உங்ககூடவேதான் நான் இருக்கேன் என்பதை செயலில் நிரூபித்து காட்டியவர் உதயநிதி ஸ்டாலின்..

டைமிங் சென்ஸ்
இளைஞர் அணி செயலாளர் என்ற பதவிக்கு வந்ததுமே, திமுக இளைஞர்களை எப்படி தயார் செய்வது என பயிற்சி பாசறைகள், கருத்தரங்கங்களை நடத்தி கொண்டிருக்கிறார். திமுகதான் ஆட்சியில் இருக்கே, இதெல்லாம் தேவையா என்றுகூட சிலர் கிண்டல் செய்கிறார்கள்.. இதுபோல பயிற்சி பட்டறைகளும், கருத்தரங்குகளும், இளைஞர்களுக்கு, சித்தாந்த ரீதியாக, கருத்து ரீதியாக அவசியம் என்பதை உதயநிதி உணர்ந்துள்ளதால்தான் இப்படி தமிழகம் முழுவதும் நடத்தி கொண்டிருக்கிறார்..

பிஸ்கட் பாய்
ஒரு எம்எஏவாக, கழகத்தின் தொண்டராக, மாநில இளைஞர் அணி செயலாளராக எல்லாவிதத்திலும், எல்லாவித கணிப்பையும் தாண்டி தன் முத்திரையை பதித்து கொண்டிருக்கிறார்.. அதிலும் டைமிங் சென்ஸ், கலைஞரை போலவே இருக்கு.. எதிராளிகளை கையாளுகிறபோது, சிறிதும் கோபப்படாமல் கையாளுகிறார். பிஸ்கட் பாய் என்று சொல்லிவிட்டு, எளிதாக கடந்து போக நினைத்தார் ஜெயக்குமார்.. உடனே உதயநிதி, அதற்கு எப்படி பதில் சொன்னார் என்பது எல்லாருக்குமே தெரியும்.. அதுதான் உதயநிதி" என்றார் அமைச்சர் சிவசங்கர்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications