இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல.. சிங்களர்களுக்கும் உதவ தயார்.. சட்டசபையில் ஸ்டாலின் திட்டவட்டம்
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: இலங்கை தமிழர்களுக்கு திமுக ஆற்றிய பணிகளை அனைவரும் நன்கு அறிவீர்கள். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவிட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக்கோரி சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு உதவிட அனுமதி கோரும் அரசினர் தீர்மானத்தை சட்டசபையில் முன்மொழிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னர் இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதாரம் மோசமான நிலையை சந்தித்துள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார சிக்கலால் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெரும்பாலான அத்தியாவசிய பொருட்களுக்கு இலங்கை வெளிநாடுகளை நம்பி, அங்கிருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதனை மேற்கொள்ள போதுமான பணம் டாலரில் இல்லாததால், பொருளாதார நெருக்கடி இலங்கை மக்களை கசக்கி பிழிந்து கொண்டிருக்கிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் விலையானது பல மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபாயை தொட்டுள்ளது. பச்சை மிளகாய் விலையோ கிலோ ஒன்றுக்கு ஆயிரம் ரூபாயாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
குழந்தைகளுக்கு பால் பொருட்கள் கூட வாங்க முடியாத அளவிற்கு விலை உள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளுக்கு ஒரு வேளை மட்டுமே உணவு உண்ணக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் இலங்கை மக்கள் அந்த நாட்டு அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இது ஒரு பக்கம் என்றால் இலங்கையில் குழந்தைகளுடன் வாழ முடியாமல் தினந்தோறும் தமிழகம் வரும் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
உணவு இல்லாமல் உள்ள இலங்கை தமிழர்களுக்கு உதவிடும் வகையில் நிவாரண பொருட்கள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு உதவ தமிழக அரசு உறுதியோடு உள்ளதாகவும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு உரிய வசதி செய்து தருமாறும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மேலும் இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு உரிய வசதியை செய்து தருமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் மத்திய அரசு இது தொடர்பாக எந்தவித அனுமதியும் வழங்காத நிலையில், தமிழக சட்டசபையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார்.
சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், இலங்கை தமிழர்களுக்கு திமுக ஆற்றிய பணிகளை அனைவரும் நன்கு அறிவீர்கள். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்று முதல்வர் குறிப்பிட்டார்.
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவிட அனுமதி கோரி கடிதம் எழுதியும் அனுமதி கிடைக்கவில்லை. தமிழர்களுக்கு மட்டுமல்ல இலங்கையில் அனைத்து மக்களுக்கும் சேர்த்தே உதவ தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறினார். அனைவரும் கட்சி பேதம் பாராமல் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தினார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications