சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயம்... தமிழக அரசு அரசாணை வெளியீடு!

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்தியாவின் 51வது மற்றும் தமிழகத்தின் 5வது புலிகள் சரணாலயமாக மேகமலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி வனக்கோட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு 2008 ல் மேகமலை சரணாலயம் உருவாக்கப்பட்டது. மேகமலையில் புலிகள் தென்படுவதால் இதை புலிகள் சரணாலயமாக மாற்ற பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழக வனத்துறை பரிந்துரை செய்திருந்தது. அத்துடன் மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும்பகுதி புலிகள் சரணாலயமாக மாறிவிடும் என பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விவசாயிகளின் ரூ.12,110 கோடி பயிர்கடன் தள்ளுபடி... தமிழக அரசு அரசாணை வெளியீடு!விவசாயிகளின் ரூ.12,110 கோடி பயிர்கடன் தள்ளுபடி... தமிழக அரசு அரசாணை வெளியீடு!

Srivilliputhur Meghamalai has been declared a tiger sanctuary by the TN Government

இதற்கிடையே மத்திய அரசு தற்போது ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் மேகமலை புலிகள் சரணாலயம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் 1 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பு, 63 வகையான பாலூட்டிகள், 323 பறவையினங்கள் புலிகள் சரணாலயமாக மாற்றுவதால் பாதுகாக்கப்படும். இதன்மூலம் இந்தியாவில் புலிகள் சரணலாயத்தின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்தியாவின் 51வது மற்றும் தமிழகத்தின் 5வது புலிகள் சரணாலயமாக மேகமலை அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Srivilliputhur Meghamalai has been declared a tiger sanctuary by the Government of Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X