ஆஹா.. இப்படி பண்ணிட்டாரே ஸ்டாலின்.. ஸ்டன் ஆன தேமுதிக.. குஷியில் அதிமுக!
- கோயா
Recommended Video

சென்னை: திமுகவை காட்டி அதிமுகவிடம் அதிக சீட் கறக்கலாம் என நினைத்திருந்த தேமுதிகவின் பேர அரசியலில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
இதை தேமுதிக எதிர்பார்க்கவே இல்லையாம். இந்த திடீர் சூழ்நிலையால் திமுக பெயரைச் சொல்லி பாஜகவையோ அல்லது அதிமுகவையோ மிரட்ட முடியாத நிலைக்கு அது போய் விட்டது.
இதனால் அதிமுக தரும் தொகுதிகளை பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு அது தள்ளப்பட்டுள்ளது. தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை கிடையாது என பொட்டில் அடித்தது போல் ஸ்டாலின் கூறியிருப்பது தேமுதிகவினரின் தூக்கத்தை கலைத்து தூக்கி வாரிப்போட செய்துள்ளது.

கோயல் தீவிர முயற்சி
தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவரால் முடிந்த அத்தனை முயற்சிகளையும் செய்து வருகிறார். ஆனால் தேமுதிக தேவையில்லாமல் முரண்டு பிடித்து வருகிறது.

தேவையில்லாத பிடிவாதம்
ஆனால் சீட் விவகாரத்தில் விடாப்பிடியாக நிற்கும் தேமுதிக தலைமை, தங்களை திமுக அழைப்பதாகவும், அதனால் தாங்கள் கேட்கும் சீட்டுக்களை அதிமுகவிடம் பேசி பாஜக வாங்கித்தர வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தி வந்தது.

ஸ்டாலின் போட்ட குண்டு
இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் பேட்டியளித்த ஸ்டாலின், தேமுதிகவை உதாசீனப்படுத்தும் வகையில் ஸ்டேட்மெண்ட் அளித்தார். இதனால் திகைத்து போய் நிற்கும் தேமுதிக முகாம், திமுக பெயரை சொல்லி சீட் அதிகம் பெறலாம் என நினைத்தால், ஸ்டாலின் இப்படி போட்டு கொடுத்துட்டாரே என நொந்து போனதாம்.

உடனே முடிவெடுக்கணும்
மேலும், இனி உடனடியாக முடிவெடுக்க வேண்டிய நிர்பந்தமும் தேமுதிகவுக்கு ஏற்பட்டுள்ளதாம். மேலும் அதிமுகவிடம் அதிக சீட் கேட்டு தொல்லை பண்ண முடியாத நிலையையும் திமுக ஏற்படுத்தி விட்டதால் தேமுதிக கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறதாம்.
-
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications