SBI வங்கி வாடிக்கையார்களுக்கு அறிவிப்பு.. இந்த லிங்கை மட்டும் எஸ்பிஐ கஸ்டமர்ஸ் கிளிக் செய்யாதீங்க
சென்னை: வாட்ஸ்அப்பில் ஆதார் அப்டேட் செய்யாவிட்டால் SBI YONO செயலி முடக்கப்படும் என்ற தகவல் சமீப நாட்களாகவே வேகமாக பரவி வருகிறது.. குறிப்பாக வாட்ஸ்அப்களில் இந்த மெசேஜ் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.. இதுகுறித்து, உண்மை சரிபார்ப்பு விளக்கம் ஒன்றை வாடிக்கையாளர்களுக்கு தந்துள்ளது.. அது என்ன?
எஸ்பிஐ YONO செயலி என்பது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி தேவைகளை மொபைல் மூலமாகவே எளிதாக செய்து கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு அதிகாரப்பூர்வ ஆப் ஆகும்..

ஸ்டேட் பாங்க் ஆப் இண்டியா
அதாவது பேங்குக்கு நேரில் போகாமல், இந்த ஆப் மூலமாகவே அக்கவுண்ட் பேலன்ஸ் பார்த்து கொள்ளலாம்.. பணம் அனுப்பலாம், பில் கட்டலாம், ரீசார்ஜ் செய்யலாம், ஏடிஎம, டெபிட் கார்டு தொடர்பான சேவைகளையும் நிர்வகிக்கலாம்.
அதே நேரத்தில் கடன், இன்சூரன்ஸ், முதலீடு போன்ற வசதிகளும் இதில் கிடைக்கின்றன. ஒரே செயலியில் வங்கி சேவையும், தினசரி டிஜிட்டல் தேவைகளும் ஒன்றாக கிடைப்பதே YONO செயலியின் முக்கிய சிறப்பு.
எஸ்பிஐ வங்கி
ஆனால், சமீபகாலமாக சோஷியல் மீடியாவில், வாட்ஸ்அப்பில் ஆதார் அப்டேட் செய்யாவிட்டால் SBI YONO செயலி முடக்கப்படும் என்ற செய்தி வேகமாக பரவியது.. மேலும், அந்த செய்தியில் ஒரு லிங்க் கொடுத்து APK ஃபைலை பதிவிறக்கம் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.. இதை பார்த்து வாடிக்கையாளர்கள் பதறிப்போய்விட்டார்கள்.
ஆனால், இந்த தகவல் முற்றிலும் மோசடி என்பது தெரியவந்துள்ளது.. PIB உண்மை சரிபார்ப்பு இதுகுறித்து விளக்கம் ஒன்றையும் தந்துள்ளது..
அதில், "SBI YONO செயலி ஆதார் புதுப்பிக்காவிட்டால் முடங்கும் என்ற தகவல் உண்மை அல்ல. இந்த மோசடியில் முதலில் உங்கள் வங்கி கணக்கு அல்லது YONO ஆப் முடங்கிவிடும் என்று பயமுறுத்தும் மெசேஜ் வரும். பின்னர் ஆதார் அப்டேட் செய்ய வேண்டும் என கூறி APK ஃபைலை இன்ஸ்டால் செய்யச் சொல்வார்கள்.
வங்கி மோசடி
நீங்கள் அந்த ஃபைலை டவுன்லோடு செய்தவுடன், உங்கள் செல்போனின் முழு கட்டுப்பாடும் மோசடிக்காரர்களிடம் சென்று விடும். அதன் மூலம் உங்கள் OTP, PIN, பாஸ்வேர்டு, வங்கி விவரங்களை அவர்கள் எளிதாக திருட முடியும். SBI ஒருபோதும் வாட்ஸ்அப், SMS அல்லது சமூக வலைதளங்கள் மூலம் APK ஃபைல்களை அனுப்பாது.
வங்கி உங்கள் ஓடிடி, PIN அல்லது தனிப்பட்ட தகவல்களை போனில் எப்போதுமே கேட்காது. ஆதார் அப்டேட் செய்ய வேண்டும் என்றால் வங்கி கிளை அல்லது அதிகாரப்பூர்வ வெப்சைட், YONO ஆப் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும்.
தெரியாத நம்பர்களில் இருந்து வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். ஆப்ஸ்களை எப்போதும் Google Play Store அல்லது Apple App Store மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும். பாதுகாப்பாக இருக்க விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.
காவல்துறை அறிவுறுத்தல்
இந்த வகை மோசடிகளை தவிர்க்க குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இந்த தகவலை பகிர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என SBI மற்றும் அரசு நிறுவனங்கள் தொடர்ந்து அறிவுறுத்தி உள்ளது.. பொதுமக்கள் எந்த அழுத்தத்திற்கும் ஆளாகாமல் நேரடியாக வங்கியை தொடர்புகொள்வதே பாதுகாப்பான வழியாகும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆதார் புதுப்பிப்புக்கான APK கோப்பை பதிவிறக்கம் செய்யுமாறு வரும் செய்தி உண்மை இல்லை என்பதுடன், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஓடிபி கேட்டால் யாரும் பகிர வேண்டாம் என்று விளக்கம் தந்துள்ளது, வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியை தந்துள்ளது..
மோசடி லிங்க்
ஒருவேளை மோசடி லிங்கை தெரியாமல் கிளிக் செய்துவிட்டாலோ அல்லது ஆப்பை இன்ஸ்டால் செய்துவிட்டாலோ உடனடியாக உங்களது செல்போனை Airplane Mode-க்கு மாற்றிவிட வேண்டும்..
பிறகு அந்த செயலியை டெலிட் செய்துவிட்டு, உங்களது வங்கி கணக்கின் பாஸ்வேர்டு, UPI PIN நம்பர்களையும் மாற்றிவிட வேண்டும.. மேலும் வங்கியை தொடர்பு கொண்டு, உங்கள் அக்கவுண்ட்டையும் தற்காலிகமாக முடக்கி வைக்க வேண்டும்.. இறுதியாக சைபர் கிரைம் போர்ட்டல் அல்லது 1930 என்ற நம்பரில் புகார் தெரிவிக்க வேண்டும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications