நிதி நெருக்கடி என்றாரே விஜய்? எம்எல்ஏக்களுக்கு கார், புதிய தலைமைச் செயலகம்! என்னங்க சார் இது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் பிரச்சாரக் களத்தில் நின்றபோது, தமிழ்நாடு அரசு வரலாறு காணாத கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்றும், இதற்கு முந்தைய தி.மு.க அரசின் தவறான நிதி மேலாண்மையே காரணம் என்றும் மேடைகளில் அனல் பறக்கப் பேசினார் இன்றைய முதலமைச்சர் விஜய்.

மாநிலத்தின் கடன் சுமை அதிகமாக இருப்பதாகவும், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இதற்காக வெள்ளை அறிக்கை எல்லாம் வெளியிட்டனர். ஆனால், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து அதிகாரத்தை ஏந்திய பிறகு, அந்த நிலைப்பாட்டில் இருந்து அரசு மெல்ல விலகிச் செல்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Vijay

ஆட்சியைப் பிடித்த உடனே, மாநிலத்தின் கல்லா பெட்டிகூட காலியாகிவிட்டதாகக் கூறிய அதே அரசு, தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் (எம்.எல்.ஏ) அரசு செலவில் புதிய கார்களைப் பரிசாக வழங்குவோம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது. ஏற்கனவே பல கோடி சொத்துக்களுடன் கோடீஸ்வரர்களாக இருக்கும் பல எம்.எல்.ஏ.க்களுக்கு சொந்தமாகவே கார்கள் உள்ளன. அப்படிப்பட்ட நிலையில், பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து இவர்களுக்கு விலையுயர்ந்த கார்களை வாங்கித் தருவதும், பராமரிப்புச் செலவுக்காக மாதந்தோறும் பல்லாயிரக்கணக்கில் பணம் வழங்குவதும் அவசியமா என்ற கேள்வி சாமானிய மனிதனிடம் இருந்து எழுகிறது.

மாநிலம் கடனில் தத்தளிக்கிறது என்று வாய்மொழியாகச் சொல்லிக்கொண்டே, மறுபுறம் மக்கள் பணத்தை இப்படி ஆடம்பர சலுகைகளுக்கு வாரி வழங்குவது எந்த வகையில் நியாயம்? எதிர்க்கட்சிகள் இதைக் கடுமையாக எதிர்த்துத் தங்களது வாகனப் பரிசை மறுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, முதலமைச்சரின் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் மேல் தளத்திற்கு மாற்றியதும், முதல்வரின் கடல் பார்க்கும் வியூக்காக பல கொடிகளை செளவ்வு செய்வதும்.. நியாயமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இப்போது சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் சுமார் 1,200 கோடி ரூபாய் பிரம்மாண்ட செலவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற கட்டிடத்தை அமைக்கத் திட்டமிட்டிருப்பதும் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

ஏற்கனவே சென்னை ஜார்ஜ் கோட்டையில் அனைத்து வசதிகளுடன் அரசு தலைமைச் செயலகம் செயல்பட்டு வரும் சூழலில், கோடிக்கணக்கில் பொதுமக்களின் பணத்தைச் செலவு செய்து புதிய பிரம்மாண்டக் கட்டிடங்களைக் கட்டுவது யாருக்காக? மாநிலத்தில் எத்தனையோ அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கும்போது, இந்த ஆடம்பரத் திட்டங்களுக்கு இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்குவது எந்த அளவுக்குச் சரி?

அரசியல் மாற்றத்தைத் தருவோம், ஊழலற்ற எளிய நிர்வாகத்தைக் கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு வழக்கமான ஆடம்பரப் பாதையையே புதிய ஆட்சியும் தேர்ந்தெடுப்பது ஏமாற்றத்தையே அளிக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளையும், இப்போது நடக்கும் செயல்களையும் தமிழக மக்கள் மிகக் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். மக்களின் உண்மையான தேவைகளை விட்டுவிட்டு, இதுபோன்ற ஆடம்பரத் திட்டங்களில் கவனம் செலுத்துவது எதிர்காலத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+