பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் சிறை.. அமலுக்கு வந்த சட்டம்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருந்த நிலையில், தற்போது அந்த சட்டங்கள் ஜனவரி 25ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் அமலுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் வகையிலான 2 மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றினார். அந்த சட்டத்தின் அடிப்படையில், மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைதானால் ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.

அதேபோல் ஆசிட் வீச்சு சம்பவம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை அளிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் பெண்ணை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறையும், பிணையில் விடுவிக்காதபடி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதேபோல் பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தால் 3 முதல் 5 ஆண்டுகள் வடை சிறை தண்டனையும் பெற்று கொடுக்க முடியும். குறிப்பிடட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்கவும் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டது.
அதேபோல் பெண்ணின் ஆடையை அகற்றும் நோக்கில் தாக்கும் குற்றத்திற்கு, இனி 7 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. நெருங்கிய உறவினரால் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால், அந்த குற்றத்திற்கு 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவை, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்தி விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்கு, தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கூட்டு வன்கொடுமை செய்த குற்றத்திற்கான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை உயர்த்தப்படுகிறது.
இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ஜனவரி 25ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டதாக தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் காலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications