“ஆர்எஸ்எஸ் குரலில் பேசும் நிர்மல் குமார்?” தவெக பெருசா கண்டுக்கலயே! மாணவர்கள் சந்தேகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லி மாணவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, விரட்டி, விரட்டி போலீஸ் அவர்களை கைது செய்தது. இது போதாது என்று அமைச்சர் நிர்மல் குமார், "தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தால் எல்லாம் சரியாகிவிடுமா?" என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது ஆர்எஸ்எஸ் அணுகுமுறை மாதிரி தெரிகிறதே! என்று மாணவர்கள் சந்தேகம் கிளப்பியிருக்கின்றனர்.

நீட், சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று.. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள் டெல்லியில் தொடர் போராட்டத்தை மேற்கொண்டிருக்கின்றனர். கரப்பான் ஜனதா கட்சியின் (சிஜேபி) அமைப்பின் கீழ் இந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Nirmal Kumar

கொந்தளிப்பில் தமிழ்நாடு

இப்படி இருக்கையில், மற்ற மாநிலங்களிலும் நீட் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. தமிழ்நாடு தொடக்கம் முதல் நீட் தேர்வை எதிர்த்து வருவதால், தமிழகத்திலும் டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர். வகுப்பு புறக்கணிப்பு, சாலை மறியல், ரயில் மறியல், தீ பந்தம் ஏந்தி போராட்டம் என.. மொத்த தமிழ்நாடும் கொந்தளிப்பில் இருக்கிறது.

தவெக நிலைப்பாடு

சூழல் இப்படி இருக்கையில், நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் தவெக அரசு, இந்த போராட்டங்களுக்கு பெரிய அளவில் ஆதரவு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், அப்படியான எந்த நிலைப்பாட்டையும் அரசு எடுக்கவில்லை. மாறாக போராட்டம் நடத்திய மாணவர்களை கைது செய்தது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்குள் சென்று, மாணவர் சங்க தலைவர்களை கைது செய்ய முயன்றது.

கல்வி அமைச்சர்

சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருச்சி, மதுரை, கள்ளக்குறிச்சி, தஞ்சை, நெல்லை என தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டக்களத்தில் இறங்கினர். அவர்கள் அனைவரையும் கைது செய்து விடுவித்தது காவல்துறை. இது குறித்து விளக்கமளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், அனுமதி இல்லாமல் போராடினதால்தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று விளக்கமளித்திருந்தார்.

அனுமதி கொடுங்கள்

ஆனால், மாணவர் சங்க தலைவர்கள் இது குறித்து கூறும்போது, "எங்களுக்கு காவல்துறையினருடன் சண்டையிட விருப்பம் கிடையாது. ஆனால், நாங்கள் அனுமதி கேட்டும் மறுக்கப்படுவதால் நாங்கள் வேறு வழியின்றி மல்லுகட்ட வேண்டியிருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக இருப்பதாக சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, மாணவர்களின் போராட்டத்திற்கு உரிய அனுமதி அளிக்க வேண்டும் வலியுறுத்தியிருந்தனர்.

முதல்வரின் ரியாக்ஷன்

அதேபோல டெல்லி மாணவர் போராட்டத்திற்கு தமிழகத்திலிருந்து அனைத்து கட்சிகளும் தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தன. முதல்வர் விஜய் மட்டும் ஆதரவு தெரிவிக்காமல் இருந்து வந்தார். பின்னர் மாணவர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி போராடி கைதான போதுதான் அவர் தனது ஆதரவை தெரிவித்தார். இதெல்லாம் தவெக மீதான விமர்சனங்களாக வெடித்திருந்தது. ஆரம்பம் முதல் தவெக மத்திய அரசுக்கு எதிராக தீவிரமாக பேச மறுக்கிறார் என்று சொல்லப்பட்டது.

நிர்மல் குமாரின் பேச்சு

இதன் தொடர்ச்சியாக மாணவர் போராட்டம் குறித்து இன்று பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துவிட்டால் மட்டும் பிரச்சனை சரியாகிவிடுமா? அவர் பதவி விலகுவது நீட் பிரச்சனைகான தீர்வு அல்ல" என்று பேசியிருக்கிறார். இது ஆர்எஸ்எஸ்-ன் குரல் என்று போராட்டக்காரர்கள் விமர்சித்திருக்கின்றனர்.

மாணவர்களில் பெரும்பாலானோர் போராட்ட களத்தில் இருக்க.. தவெக தலைவர்கள் ஜனநாயகன் படத்தில் இருந்தார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது தவெகவுக்கு உண்மையில் மாணவர் போராட்டங்களில் அக்கறை இருக்கிறதா? என்று மாணவர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+