ஹெச்.ராஜாவுக்கு முற்றும் நெருக்கடி... காவல் ஆணையரிடம் புகார் அளிக்கும் சுப.வீரபாண்டியன்..!
சென்னை: பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கவுள்ளார்.
பொறுமையின் இலக்கணமாக திகழ்ந்த பேராசிரியர் சுப.வீரபாண்டியனையே, ஹெச்.ராஜாவின் பேச்சு கொதித்தெழ வைத்துவிட்டது.

இதனிடையே காவல் ஆணையரிடம் தாம் அளிக்கவுள்ள புகார் விவரம் பற்றி சுப.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
அன்புடையீர் வணக்கம்,
27/09/2021 அன்று சமூக வலைத்தளங்களில் பிஜேபியைச் சேர்ந்த எச். ராஜா, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய காணொளி வெளியாகி உள்ளது. அதில் என்னைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்டு, ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தது தொடர்பாகப் பொய் பேசுவதால், சுப.வீரபாண்டியனின் மூளை குப்பைத் தொட்டியாக உள்ளது என்றும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை நிலையமான அறிவாலயத்தில் உட்கார்ந்துகொண்டு சுப.வீரபாண்டியன் பிச்சை எடுக்கிறான் என்றும் ஒருமையில் என்னை அவதூறாகப் பேசியுள்ளார்.
மேலும், பத்திரிகையாளர்கள் அனைவரையும் நோக்கி எல்லா பத்திரிகையாளர்களும் பிரஸ்ட்டிடியூட்ஸ் (Presstitutes) என்று கூறியுள்ளார். Presstitutes என்றால் பணத்திற்காக பொய்யான மற்றும் மோசமான செய்திகளை வெளியிடுபவர்கள் என்று பொருள் என்பதை அறிவோம். அந்தச் சொல்லின் மூலச் சொல்லாக, Prostitutes என்பது உள்ளது என்று அதற்கான விளக்கங்களை இணையங்களில் காணமுடிகிறது
இவ்வாறாகப் பத்திரிகையாளர்கள் அனைவரையும் கேவலப்படுத்தி, எச்.ராஜா பேசியுள்ளது கருஞ்சட்டைத் தமிழர் என்ற மின்னிதழ் ஆசிரியராக உள்ள எனக்கும் சேர்த்து சொல்லப்பட்டுள்ளது என்றே கருதுகிறேன்.
எனவே மேற்கண்டவாறு என்னை அவதூறு செய்தும், எனது நற்பெயரைக் கெடுக்கும் விதமாக பொதுமக்கள் மத்தியில், அவப்பெயர் உண்டாக்கத் திட்டமிட்டு கெட்ட நோக்கத்துடன் பேசியும் உள்ள எச்.ராஜா மீது சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் நண்பகல் 12 மணி அளவில் புகார் அளிக்க உள்ளேன்.
இவ்வாறு சுப.வீரபாண்டியன் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இதனிடையே ஹெச்.ராஜா மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை ஊடகத்தினர் உற்று நோக்கி வருகின்றனர்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications