சென்னையில் இன்று சூரியனுக்கு “ரிலீஸ்”.. 19 ஆம் தேதி மழையின் அடுத்த இன்னிங்ஸ் - தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று மீண்டும் வெயிலடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து இன்று ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், "மயிலாடுதுறை மாவட்டம் சீழ்காழியில் 436 மில்லி மீட்டர் கனமழை கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்து இருக்கிறது.
நேற்று மட்டும் 111 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது. மொத்தமாக சேர்த்தால் 550 மில்லி மீட்டர் மழை பொழிந்து உள்ளது." என்றார்.

வெதர்மேன் பதிவு
"சென்னையில் தீவிர கனமழை அல்லது மிக கனமழைக்கான வாய்ப்புகள் முடிந்துவிட்டன. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பதிவாகி உள்ளது." என்று அவர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

லேசான மழை
அவர் வெளியிட்டு உள்ள மற்றொரு பதிவில், "அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் மழையின் பொழிவு சற்று இருக்கும். குறிப்பாக அதிகாலை நேரங்களில் மழை இருக்கும். குறிப்பாக இன்று அதிகாலை சென்னையில் கனமழை தீவிரமாக இருந்தது. நவம்பர் 14 ஆம் தேதி வரை மழைக்கான வாய்ப்புகள் உள்ளன.

வெயில்
அதன் பிறகு சென்னைக்கு மழையிலிருந்து சற்று ஓய்வு கிடைக்கும். இன்று பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். ஆங்காங்கே சில இடங்களில் மழை பொழிவும் இருக்கலாம். நாளையும் இதே போன்ற நிலை தொடரும். தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளன.

புதிய தாழ்வு நிலை
நவம்பர் 19 அல்லது 20 ஆகிய தேதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகலாம். வடகிழக்கு பருவமழை காலத்தில் அரிதாக கனமழையை பெறும் கரூர், திருப்பூர் நாமக்கல் மாவட்டங்களில் இன்று மழைக்கான வாய்ப்புகள் உள்ளன." என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் மேலும் தீவிரம் அடையத் தொடங்கியதை அடுத்து, வங்கக் கடலில் கடந்த புதன்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வியாழன் அன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டது.

சென்னை
தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், வடதமிழகத்தில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று தமிழகம் முழுவதும் சுமார் 20க்கும் அதிகமான மாவட்டங்களில் நல்ல மழை கொட்டித் தீர்த்தது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது.

தாழ்வு மண்டலம்
நாகப்பட்டினம் - அதிராம்பட்டினம் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், டெல்டா மாவட்டங்களில் நேற்று தொடங்கிய மழை அதிகாலை வரை விடாமல் கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகனமழை பொழிந்துள்ளது. அதேபோல், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications