கரெக்ட்டா.. தென்னந்தோப்பு வழியே.. படகில் சென்று மாப்பிள்ளையை கைப்பிடித்த பெண்.. நெகிழும் ஆந்திரா..!
: இதயத்தை நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று ஆந்திர மழையில் நடந்துள்ளது
சென்னை: ஊரே மழை வெள்ளத்தில் மூழ்கிக்கிடந்த நிலையில், மணப்பெண்ணுக்கு படகு தந்து அவர் திருமணத்தை நடத்துவதற்காக மாநில பேரிடர் மீட்புப்படையினர் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.. அந்த வகையில், ஆந்திர பிரதேசத்திலும் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை கொட்டி வருகிறது.
இதனால், பல்வேறு மாவட்டங்களிலும், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.. மரங்கள், கரண்ட் கம்பங்கள் முறிந்துள்ளன.. போக்குவரத்தும் மொத்தமாக முடங்கி போய்விட்டது.

வெள்ளப்பெருக்கு
இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.. தொடர் கனமழை காரணமாக, கோதாவரி, எலூரு, கொனசீமா உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மக்களுக்கு, முன்னெச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அதாவது 36 வருடங்களுக்கு பிறகு, இந்த அளவுக்கு மோசமான கனமழையும், வெள்ளப்பெருக்கும் இந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ளதாம்.. கோதாவரி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம், மேற்கு கோதாவரி, கோனசீமா மாவட்டங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமங்களை மூழ்கடிக்கும் நிலையை இன்று ஏற்படுத்தியுள்ளது.

கொனசீமா
இதில் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது, கொனசீமா மாவட்டம்தான்... இந்த மாவட்டத்தில் மட்டும், 51 கிராமங்களை சேர்ந்த 1.51 லட்சம் மக்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால், இந்த மாவட்டத்தில் உள்ள 37 பள்ளிகளும் உடனடியாக மூடப்பட்டுள்ளன. அதேபோல, வெள்ளம் பாதித்த மக்களை தங்க வைக்க, முகாம்கள் ஏராளமாக உருவாக்கப்பட்டுள்ளன.. அங்கு பாதிக்கப்பட்ட மக்கள், பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்..

வேலைகள்
ஒரு மாவட்டமே வெள்ளத்தில் தத்தளிக்கும் சூழலில், இதே மாவட்டத்தில் ஒரு இனிய நெகிழ்ச்சி தருணம் நடந்துள்ளது.. இங்கு வசித்து வரும் பிரசாந்தி இளம்பெண்ணுக்கும், பக்கத்தில் உள்ள ஊரை சேர்ந்த அசோக் என்ற இளைஞருக்கும் பெரியார்கள் நிச்சயம் செய்திருந்தனர். திருமணத்துக்கு நாளும் குறிக்கப்பட்டிருந்தது.. எப்படியும் மழைக்காலம் துவங்கும் முன்பே திருமணத்தை நடத்திவிட பெரியவர்கள் முடிவு செய்தனர்.. ஆனால், முன்கூட்டியே பெய்த மழையால், இரு குடும்பத்தினரும் திருமண வேலைகளை செய்ய முடியாமல் திணறினர்..

மாப்பிள்ளை
முகூர்த்த நாள் நெருங்க நெருங்க, கனமழையால் நகரெங்கும் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது.. திருமணத்துக்குள் மழை குறைந்து விடும் என்று நினைத்தனர்.. ஆனாலும் திருமண நாள் வரை, நகரமே வெள்ளத்தில் சிக்கியது. இதில் பெருமளவு சிக்கி கொண்டது மணமகள் குடும்பத்தினர்தான்.. இவர்கள் பகுதியில் எல்லா சாலைகளிலும் நீர் நிறைந்து காணப்பட்டது.. திருமணத்தன்று, மண்டபத்துக்கு செல்லக்கூடிய முடியாத நிலைமை ஏற்பட்டது.. காலையிலேயே பட்டுப்புடவை, நகைகள் என அலங்காரத்துடன் தயாரானார் பிரசாந்தி..

தென்னந்தோப்பு
அதனால், என்ன செய்வதென்று தெரியாமல், மணமகள் குடும்பத்தினர் திகைத்துபோய் நின்றனர்... பிறகு, படகு ஒன்றை ஏற்பாடு செய்து, மாப்பிள்ளை வசிக்கும் பகுதிக்கு சென்றுவிடலாம் என்று முடிவெடுத்தனர்.. இதற்காக, ஆந்திர பிரதேச பேரிடர் மீட்பு படையினரிடம் உதவி கேட்கவும், அவர்களும் நிலைமையை உணர்ந்து உடனடியாக உதவி செய்ய முன்வந்தனர். அவர்கள் உதவியுடன் 2 படகுகளில், மணப்பெண், அவரது உறவினர்கள் உள்ளிட்டோர் புறப்பட்டனர்... இவர்கள் கடந்து வரும் வழி முழுவதும் நீரால் சூழப்பட்ட தென்னந்தோப்புக்கள் பகுதியாகும்..

ஜாக்கிரதை
மிகவும் ஜாக்கிரதையாக மணமகள் குடும்பத்தை, மீட்பு படையினர் அழைத்து சென்று, ஒரு வழியாக மாப்பிள்ளையின் ஊரில் கொண்டு வந்து சேர்த்தனர். திட்டமிட்டபடி, குறித்த நேரத்தில், பிரசாந்தி - அசோக் திருமணமும் நடந்தது.. இதற்கெல்லாம் காரணம், தங்களுக்கு படகு தந்து உதவிய பேரிடர் மீட்பு படையினர்தான் என்று நெஞ்சம் நிறைந்து நன்றியுடன் சொல்கின்றனர் புதுமண தம்பதியினர். அதேபோல, உரிய நேரத்தில் உதவிய மாநில பேரிடர் மீட்புப் படையினருக்கு கோனசீமா மாவட்ட மக்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications