• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஹீரோ எடப்பாடியார்.. "வாங்க.. உட்காருங்க".. எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்து.. கலக்கிய முதல்வர்

|

சென்னை: நிவர் புயல் என்ற நிகழ்வு ஒன்றுதான் என்றாலும், அதை முதல்வர் கையாண்ட முறைகள் அலாதியாக இருந்தது.. அந்த வகையில், எதிர்க்கட்சிகளின் பிளானை நொறுக்கி தள்ளிவிட்டு முன்வந்துள்ளார் ஹீரோ எடப்பாடியார்!

இன்னும் சில நாட்களே தேர்தலுக்கு உள்ள நிலையில், ஆளும் தரப்பு மிக கவனமாக கால் எடுத்து வைத்து வருகிறது.. ஒவ்வொரு விஷயத்தையும் நாசூக்காக கையாண்டு வருகிறது.

கொரோனா விஷயத்தையே அரசியலாக்கின எதிர்க்கட்சிகள்.. "தொற்றை கட்டுப்படுத்தாவிட்டால், ஆட்சி அமைக்க செய்யும் திமுக" என்ற ஸ்டாலினின் காட்டமான அறிக்கை அதிமுக நிலைகுலைய வைத்தது என்பதையும் மறுக்க முடியாது.

அந்த 6 மணி நேரம்.. லேசாக மாறிய நிவர்.. கடைசி நேர டிவிஸ்ட்.. புயல் கரையை கடக்கும் போது நடந்தது என்ன?

 விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

இதற்கு பிறகுதான் எடப்பாடியார் முற்றிலும் சுதாரித்தார்.. விஜயபாஸ்கர் உட்பட பலரை ஓரங்கட்டினார்.. ஓபிஎஸ்ஸையும் அருகில் சேர்க்கவில்லை.. தனி ஒருவராகவே அனைத்தையும் நேரடியாக இறங்கி கவனித்து, இறுதியில் தொற்றை கட்டுப்படுத்தும் அளவுக்கு கவனத்துடன் செய்தார்.. முக்கியமாக ஆபத்தில் இருந்து சென்னையை மீட்டெடுத்தார்... எதிர்க்கட்சிகள் அத்துடன் வாய் திறக்கவே இல்லை.

அரசியல்

அரசியல்

இந்த நிவர் புயலை வைத்தும், அடுத்தடுத்த அரசியல் தந்திரத்தை கையில் எடுத்தன.. எங்கே 2015 பாதிப்பு மாதிரியே இந்த முறையும் வந்துவிடுமோ என்ற கலக்கம் மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், கேள்விகள் அரசுக்கு எதிரான வந்துவிழுந்தன.. கோரிக்கைகள் வந்து குவிந்தன.

 பிரச்சாரம்

பிரச்சாரம்

ஆனால், முதல்வர் புயல் வருவதற்கு 2 நாளைக்கு முன்பே களத்தில் குதித்துவிட்டார்.. இந்த மழை வெள்ளத்தை வைத்தே, அரசுக்கு எதிராக பிரச்சாரத்தை நடத்தி விடலாம் என்ற எதிர்கட்சிகளின் நம்பிக்கையை தவிடுபொடியாக்கினார்.. முதலாவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பேசிய பேச்சுக்கள்தான் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் மேலாண்மை அதிகாரிகளை, "வாங்க.. உட்காருங்க.. நாம சேர்ந்து ஒன்றாக செயல்படுவோம்" என்று ஆரம்பித்து, மக்களுக்கு பாதிப்பு எந்த வகையிலும் வந்துவிடக்கூடாது என்பது முதல், அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

 சாமர்த்தியம்

சாமர்த்தியம்

இதையடுத்து, செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிடுவது பற்றின பேச்சும் நடந்துள்ளது.. அப்போது ஒரேடியாக திறந்துவிட்டதால் வந்த பாதிப்பை, சென்னை மக்கள் சந்தித்துவிடக்கூடாது என்பதற்காகவே, முதல்கட்டமாக அதுவும் புயலுக்கு முன்னதாகவே திறந்து விட்டு சாமர்த்தியத்தை காட்டினார் முதல்வர்.. ஏரியை திறந்துவிட போகிறோம் என்பதை முறைப்படி அறிவித்தார். பொதுப்பணித்துறை அதிகாரிகளும், எந்த நேரத்தில், எவ்வளவு நீரை திறந்துவிடப்போகிறோம், என்பதை துல்லியமாக அறிவித்தனர்.. அதற்கான முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு, அடையாறு ஆற்றங்கரை பகுதி மக்களை பாதுகாத்து விட்டனர்.

 செம்பரம்பாக்கம்

செம்பரம்பாக்கம்

எல்லாவற்றிற்கும் மேலாக, கொட்டும் மழையில் குடையை எடுத்துகொண்டு ஏரிக்கே முதல்வர் வந்து பார்வையிட்டு, ஆய்வு நடத்தியது எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்தது.. இதற்கு நடுவில் ட்விட்டரில் மணிக்கொருதரம் எடப்பாடியார் தரும் ட்விட்டர் பதிவுகள் மக்களின் கவனத்தை ஈர்த்தன.. அதைவிட யாராவது சந்தேகம், ஆலோசனைகள் சொன்னால், அதற்கு நேரம் ஒதுக்கி பதிலளிக்கும் முதல்வரின் அக்கறை மலைக்க வைத்தன.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

இப்படித்தான் அன்று வர்தா புயலில் ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது சிறப்பாக செயலாற்றினார்.. இருந்தாலும் அன்றைய ஓபிஎஸ்ஸை விட, 2015-ல் முதல்வர் ஜெயலலிதாவைவிட, எடப்பாடியார் ஒருபடி மேலே நின்று நிவர் புயல் ஹீரோவாகி விட்டார்!

 
 
 
English summary
Super, CM Edapadi Palanisamys Super action against Nivar Cyclone
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X