ரூ.50 நோட்டு இருக்கா? பழைய 50 ரூபாய் நோட்டு இருந்தால்,ரூ.25 லட்சம் சம்பாதிக்கலாமே! இது சூப்பர் ஆஃபர்
சென்னை: பழைய 50 ரூபாய் நோட்டுகள் இருந்தால் போதும்.. உங்களுக்கு லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும் என்று சோஷியல் மீடியாவில் ஒரு செய்தி பரவி ஆச்சரியத்தை கிளப்பி கொண்டிருக்கிறது.. எப்படி தெரியுமா?
ரிசர்வ் வங்கி அடிக்கடி பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்து புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. மற்றொருபக்கம், பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கான ஆன்லைன் சந்தைகளும் தற்போது பெருகிவிட்டன..

10 ரூபாய்: அந்தவகையில், ஆன்லைன் சந்தையில் பழைய மற்றும் அரிவகை நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கான தேவையிம் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கேற்றவாறு, அரியவகை 10 ரூபாய்களுக்கெல்லாம் மிகவும் பஞ்சமாகிவிட்டது. அதனால்தானோ என்னவோ, பழைய 10 ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் அதை வைதே சம்பாதிக்கலாம்.. இதுபோன்ற செய்திகள் சோஷியல் மீடியாவில் அடிக்கடி வெளியாகி கொண்டேயிருக்கின்றன..
இதற்கு பிரதான காரணம், இந்த 10 பழைய ரூபாய் நோட்டில்தான், சீரியல் நம்பர்கள் இருக்கும்.. இந்த சீரியல் நம்பர் ரொம்ப ஸ்பெஷலானது.. அதுவும் ஜீரோ நம்பர் அதிகமாக இருக்கும், இந்த நோட்டுக்களுக்கு நிறையவே டிமாண்டு இருக்கிறது..
நோட்டு விற்பனை: அதைவிட முக்கியமாக, நம்பர் 9 அதிகம் கொண்ட 10 ரூபாய் நோட்டுக்களுக்கு கூடுதல் டிமாண்டு உள்ளது. பழைய 10 ரூபாய் நோட்டின் சீரியல் நம்பரில் 0 நம்பர் அதிகமாக இருந்தால் அந்த ரூபாய் நோட்டு அதிக விலைக்கு வாங்கப்படும்.. 10 ரூபாய் நோட்டுக்கள் தந்து, 10 லட்சம் ரூபாய் வருமானம் பார்க்கலாம்.
இதற்காகவே , https://coinbazzar.com என்ற வெப்சைட் உள்ளது.. இந்த இணையதளத்திற்கு சென்று, உங்களிடமுள்ள 10 ரூபாய் நோட்டுகளை நீங்கள் விற்கலாம்.
வெப்சைட்கள்: அதுபோலவே, பழைய 20 ரூபாய் நோட்டுக்கள் இருந்தால், அவைகளை இதுபோன்ற வெப்சைட்களில வைத்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.. இதுகுறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.. ஆனால், எல்லாவகையான 20 ரூபாய் நோட்டுகளுக்கும் பணம் கிடைக்காது.. அந்த 20 ரூபாய் நோட்டின் முன் பக்கத்தில் மகாத்மா காந்தியின் போட்டோவும் இருக்க வேண்டும்.
அதைவிட முக்கியமாக, "786" என்ற நம்பர் அச்சிடப்பட்டிருக்க வேண்டுமாம்.. அத்துடன், இஸ்லாமிய மக்களிடையே 786 என்ற எண் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இவற்றை லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குவதற்கும் மக்கள் தயாராக உள்ளதாக, சோஷியல் மீடியா தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. . எனவே, இந்த அரிய வகை 20 ரூபாய் நோட்டினை, ஆன்லைனில் OLX -ல் விற்பனை செய்யலாம்.. வெறும் 20 ரூபாயை, 6 லட்சம் ரூபாய் வரை பணம் கிடைக்குமாம்.
ஆன்லைன் டிமாண்டு: அதுபோலவே, இப்போது 50 ரூபாய் நோட்டுக்கும் டிமாண்டு கூடியிருக்கிறதாம்.. இந்த பழைய 50 ரூபாய் இருந்தால், ஆன்லைனில் ரூ.25,000,00/- வரை விற்பனை செய்து சம்பாதிக்க முடியும் என்று தகவல்கள் பரவி வருகின்றன.
இப்போது பழைய 50 ரூபாய் நோட்டுகளுக்கான மவுசு சற்று அதிகமாகவே இருக்கிறதாம்.. இந்த பழைய 50 ரூபாய் நோட்டுக்கு 5 லட்சம் முதல் 25 லட்சம் வரை பணம் கிடைக்கும் என்கிறார்கள்.
பழைய நோட்டு: அந்த பழைய 50 ரூபாய் நோட்டின் வரிசை எண் 786 ஆகவும், நோட்டின் முன்பக்கம் மகாத்மா காந்தியின் படமும் இருப்பது மிக மிக முக்கியமானதாகும்.. மேற்கண்ட பழைய நோட்டுக்கள் உங்களிடம் இருந்தால், அதை நீங்கள் விற்க விரும்பினால் Quikr என்ற வெப்சைட்டில் ஒரு விற்பனையாளராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பிறகு, உங்களிடமிருக்கும் அந்த பழைய 50 ரூபாய் நோட்டை தெளிவாக போட்டோ எடுத்து, அதை அப்லோடு செய்ய வேண்டும். இந்த 50 ரூபாய் போட்டோ விளம்பரத்தை பார்க்கும் நபர்கள், உங்களை தொடர்பு கொள்வார்கள்.
ரிசர்வ் வங்கி: ஆன்லைனில் இந்த அரியவகை 50 ரூபாய் நோட்டுகளுக்கு இருக்கும் டிமாண்ட் + கஸ்டமர்களின் விருப்பத்தை பொறுத்தே பணம் கிடைக்குமாம்.. எனினும், இந்த விஷயத்தில் முழுக்க முழுக்க கவனமுடன் நீங்கள் மட்டுமே செயல்பட வேண்டும். ஆனால், ஆன்லைன் மூலமாக ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் விற்பனை செய்வதையும், வாங்குவதையும் ரிசர்வ் வங்கி ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications