• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"வேற லெவல்".. ஒரேடியாக எகிறிய இமேஜ்.. ஃபார்முக்கு வந்த ராகுல்.. அண்ணனாக, மகனாக.. பொங்கும் பாசம்!

|

சென்னை:ஃபார்முக்கு வந்துட்டார் ராகுல்... இதைதான் தொண்டர்கள் ஆரம்பத்தில் இருந்து எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள்..!

கடந்த மாதம், மண்பானை சட்டியில் கல்உப்பை போட்டு, சோறாக்கி அதன்மூலம் ஒரு கலக்கு கலக்கி சென்றபோதே இதற்கான அச்சாரத்தை போட்டுவிட்டார் ராகுல் காந்தி.. அந்த வீடியோ அந்த அளவுக்கு வைரலாகும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

இதற்கு பிறகு அடுத்தடுத்து 2 முறையும் பிரச்சாரத்துக்கு வந்து போனார்.. ராகுலின் பேச்சு இந்த அளவுக்கு இயல்பானதா என்பதை கொங்கு மக்கள் நேரடியாகவே கண்டனர்..

 மலைப்பு

மலைப்பு

தன்னை நேரில் சந்திக்க முண்டியடித்து கொண்டு வரும் கூட்டத்தை கண்டு மலைத்தும் போனார் ராகுல்.. 8 வயது சிறுமிக்கு ராகுலை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. அந்த குழந்தை, ராகுலுடன் போட்டோ எடுத்து கொள்ள ஆர்வம் காட்டியபோது, அதை கண்டதும் ராகுல், கீழே இருந்த சிறுமியை அப்படியே பிரச்சார வேனில் தூக்கி கொண்டார்.. அப்போது சிறுமியின் விலகிய மேலாடையையும் சரிசெய்த அண்ணனாக உயர்ந்தார்.

இப்போது புதுச்சேரிக்கு வந்தபோதும்கூட, யாரும் என்னை ராகுல்ஜின்னு பெயர் சொல்லாதீங்க.. சார்-ன்னும் கூப்பிடாதீங்க.. "அண்ணன்-ன்னு கூப்பிடுங்க" என்ற உரிமையை இளம்பெண்களுக்கு தந்தபோது, துள்ளி ஏகதித்து மகிழ்ந்தனர்.. அதிலும் நேற்று ஒரு பெண் ராகுலுடன் செல்பி எடுக்கும்போது, அவரது கையை பிடித்து கொண்டு குதித்ததும், கண்கலங்கி தவித்ததுமே அதன் அர்த்தங்களை உணர்த்தியது. அதன்பிறகுதான் அந்த மாணவியை கட்டிப்பிடித்து தன் அன்பையும் பகிர்ந்தார். பெண்களுக்கு 60 சதவீத இடஒதுக்கீட்டை ராகுல் வழங்க காரணமும் பெண்ணீய அரசியலும் அப்போது விளங்கியது..

ஜனநாயகம்

ஜனநாயகம்

ஜனநாயகம் வலுப்படும் நாட்டில், அனைத்து மொழிகளும் அனைத்து பண்பாடுகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நாட்டின் பன்மைத்தனத்தின் முக்கியத்துவத்தையும் கருத்தியலையும் மட்டுமல்ல, ஒற்றை சிந்தனைக்கு இங்கு இடமே இல்லை என்ற வலுவான கருத்தை எடுத்துரைத்தார்.. மீனவர்கள் ஆங்கிலத்தில் பேசுவது என்பது அரிதான விஷயம்..

 உணர்வுகள்

உணர்வுகள்

மீனவ பகுதியில் யாரோ ஒருவர் இங்கிலீஷில் பேச முயன்றபோதுகூட, தமிழிலேயே பேசுங்க என்று சொல்லி அவர்களின் ஆதங்க உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்த சொன்னார்.. நாராயணசாமி மொழிபெயர்த்து பங்கம் ஆன கதை ஒரு பக்கம் இருந்தாலும், ராகுலின் முகம் அந்த நேரத்தில் கொதிப்பில் பேசிய பெண்ணின் உணர்வுகளிலேயே கவனத்தை குவித்திருந்தது.

 முக்கியத்துவம்

முக்கியத்துவம்

இதற்கு நடுவில், 7 பேர் விடுதலை விஷயத்திலும் ஒரு பாயிண்ட்டை ராகுல் சொல்லி இருந்தார்.. "என் தந்தையை கொன்றவர்கள் யார் மீதும் கோபம் இல்லை" என்ற வார்த்தை மிகவும் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.. இப்போதைக்கு குடியரசு தலைவர்தான் முடிவுகளை எகககூடிய சூழலில் இருந்தாலும், ராகுலின் இந்த பேச்சு, 7 பேர் விடுதலை சம்பந்தமான முடிவுகளை சாதகமாக எடுக்க வழிவகுத்துள்ளது என்றே சொல்லலாம்.. பாஜக அரசுக்கும் ஒரு குழப்பத்தை தீர்த்து வைக்கும் வகையில் ராகுல் எளிதாக்கி விட்டிருக்கிறார் என்றே சொல்லலாம்.

வெற்றி

வெற்றி

ஆக மொத்தம், ராகுலின் தமிழக வருகையானது, அரசியலையும் தண்டி, மக்கள் எளிதில் அணுகக்கூடிய, நெருங்கக்கூடிய, அன்பை பொழியக்கூடிய ஒரு தேசிய தலைவர் என்பதைதான் நிரூபித்துவிட்டு போயுள்ளது.. இப்படித்தான் அன்று நேருவும் மக்கள் மனசை வென்றார்.. இப்படித்தான், இந்திராவும் மக்கள் மனசை வென்றார்... இப்படித்தான், ராஜீவும் மக்கள் மனசை வென்றார்... இப்போது ராகுலும் வென்றுள்ளார்..!

 
 
 
English summary
Super, Rahul Gandhis turning point in Puducherry visit
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X