திமுகவிலேயே இருந்திருக்கலாம்.. புலம்பும் சூர்யா சிவா! பாஜகவில் பலர் விலக சொன்னாரு பாருங்க காரணம்
சென்னை: டெய்சி சரண் உடனான சர்ச்சைக்குரிய ஆடியோ வெளியானதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் பாஜகவிலிருந்து விலகிய சூர்யா சிவா, பேசாமல் திமுகவிலேயே இருந்திருக்கலாம் என்று தெரிவித்து உள்ளார். கட்சியில் கடுமையாக உழைத்து, கட்சியில் பல பேரை சேர்த்தும், பாஜகவில் தன்னை ஏற்க மறுக்கிறார்கள் என்று கூறிய அவர், ஸ்லீப்பர் செல் என்று சொன்னதாகவும், பாஜகவிலிருந்து பலர் விலகி செல்வதற்கு இதுவே காரணம் என்றும் கூறினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜகவில் இணைந்த திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவுக்கு கட்சியின் மாநில ஓபிசி பிரிவு பொதுச்செயலாளர் பதவியை வழங்கினார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
இந்த நிலையில்தான் கடந்த மாதம் சூர்யா சிவாவுக்கும், பாஜக சிறுபான்மை அணி மாநில தலைவரான டெய்சிக்கும் இடையேயான பரபரப்பு தொலைபேசி உரையாடல் வெளியாகி கட்சிக்கு உள்ளேயும் வெளியிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

டெய்சியை இழிவாக பேசிய சூர்யா
தரக்குறைவான அசிங்கமான வார்த்தைகளை கொண்டு டெய்சியை திட்டிய திருச்சி சூர்யா, அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோரது பெயர்களும் அந்த ஆடியோவில் அடிபட்டன.

நடவடிக்கை
இதனை தொடர்ந்து சூர்யா சிவா பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துவதாகவும், ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு ஆணையிடுவதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். அத்துடன் அந்த ஆடியோவை பகிர்ந்து ட்விட்டரில் விமர்சித்த காயத்ரி ரகுராமை 6 மாதங்களுக்கு கட்சியிலிருந்து இடைக்காலமாக அண்ணாமலை நீக்கினார்.

அக்கா - தம்பி
இந்த நிலையில் சூர்யா சிவாவும் டெய்சி சமாதானமாக போவதாக தெரிவித்தனர். பாஜக தலைமையகத்தில் சூர்யா சிவாவுடன் செய்தியாளர்களை சந்தித்த டெய்சி "சூர்யா சிவா எனக்கு தம்பி மாதிரி. எங்களுக்கு இடையே அக்கா - தம்பி போன்ற உறவு இருக்கிறது." எனக்கூறினார். இந்த நிலையில் 6 மாதம் சூர்யா சிவாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தார் அண்ணாமலை.

விலகிய சூர்யா சிவா
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார் திருச்சி சூர்யா. அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி. இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும்.

கேசவ விநாயகம் மீது புகார்
அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் அவர்கள் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன். உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி." என்று தெரிவித்து உள்ளார்.

எல்.முருகன் மீதும் புகார்
இதையடுத்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை பகிர்ந்த சூர்யா சிவா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீது புகாரளித்து இருந்தார். இந்த நிலையில் அடுத்து அவர் வெளியிட்ட பதிவில், அண்ணாமலைக்கு நெருக்கமாக இருந்த பாஜக மாநில விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி தனது ராஜினாமாவுக்கு காரணம் என்று கூறினார்.

சூர்யா சிவா பேட்டி
இந்த நிலையில் தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்த சூர்யா சிவா, "திமுகவிலேயே இருந்திருக்கலாம் என்று உண்மையாகவே எனக்கு தோன்றுகிறது. ஏனென்றால், இதுவரைக்கு சிறைச்சலையை நான் பார்த்ததில்லை. காவல்துறை முழுக்க எனக்கு எதிராக இருந்தது. 2 அமைச்சர்களும் வாய்ப்புக்காக காத்திருந்தார்கள். சாதாரணமாக ஒரு தொழில்கூட நடத்த முடியவில்லை.

ஸ்லீப்பர் செல் என்று சொன்னார்கள்
அதையும் மீறி கட்சியில் இவ்வளவு கடுமையாக உழைக்கிறோம். கட்சியில் பல பேரை சேர்த்து உள்ளேன். திமுகவினர் என் மீது கோபமாக உள்ளனர். ஆனால் பாஜகவில் என்னை ஏற்க மறுக்கிறார்கள். ஸ்லீப்பர் செல் என்று சொன்னார்கள். பாஜகவிலிருந்து பலர் விலகி செல்வதற்கு இதுவே காரணம். தங்கள் ஆட்களாக சேர்த்துக்கொள்ள வேண்டும்." என்றார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications