வேலூருக்கு ஹேப்பி.. பொசுக்குனு கலெக்டர் இப்படி சொல்லிட்டாங்களே.. ஓஹோ, இதுதான் சர்ப்ரைஸ் பரிசா? சபாஷ்
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வரும்நிலையில், வேலூர் தொகுதியில் மொத்த பேரின் கவனமும் குவிந்துள்ளது.. என்ன காரணம்?
விரைவில் லோக்சபா தேர்தல் நடக்க போகிறது.. தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது.. இந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

பிரச்சாரங்கள்: இதையடுத்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், 100 சதவீத வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு பிரச்சாரங்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் 100 சதவீத விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம் உள்ளிட்ட அம்சங்கள் கையிலெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், விளையாட்டு வடிவிலேயே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, இளைய சமுதாய வாக்குகளை ஈர்க்க முயன்று வருகிறார்கள்.. பல்வேறு இடங்களில் ரோடு ஷோ போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
அழைப்பிதழ்கள்: மற்றொருபக்கம், தேர்தல் விழிப்புணர்வு அதிகாரிகளான மாவட்ட ஆட்சியாளர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து, தேர்தல் அழைப்பிதழ்களை தந்து வருகிறார்கள். அப்போது 100 சதவீதம் வாக்களிக்க வேண்டிய அவசியத்தையும் வாக்காளர்களுக்கு எடுத்துரைத்து வருகிறார்கள்.
இதில், வேலூர் மாவட்ட கலெக்டர் ஒருபடி மேலே போய்விட்டார்.. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று கல்லூரி வளாகத்தில், 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியை துவக்கி வைத்ததுடன், சர்ப்ரைஸ் ஒன்றையும் அறிவித்துள்ளார்.
100 சதவீதம்: அப்போது அவர் பேசியபோது, "வேலூர் மாவட்டத்தில் இளம் வாக்காளர்கள், முதல் முறை வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கல்லூரிகளில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
கல்லூரி பயிலும் முதல்முறை வாக்களிக்க உள்ள மாணவ, மாணவிகள் வாக்குப்பதிவு மையத்திற்கு சென்று தங்களுடைய வாக்கை செலுத்தி அங்குள்ள வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுடன் செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும். முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நம்முடைய மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு தினத்தன்று தொப்பி பரிசளிக்கப்பட உள்ளது.
முதல்முறை: வேலூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதல் முறை வாக்களிக்க போகிற, வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர்கள் தங்களுடைய மனசாட்சிக்கு உட்பட்டு வாக்கினை செலுத்த வேண்டும்.
வாக்களிப்பது நம்முடைய ஜனநாயக கடமை. உங்களுடைய வீட்டில் உள்ள பெரியவர்கள், சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் வாக்களிப்பதன் அவசியத்தை குறித்து எடுத்துரைத்து நம்முடைய மாவட்டம் 100 சதவீதம் வாக்குப்பதிவை அடையும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்றார்.
மக்கள் குஷி: முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு, கலெக்டர் தொப்பி பரிசளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது வேலூர் மக்களுக்கு குஷியை தந்து வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications