சூரிய கிரகணம்.. தீபாவளிக்கு பின் நிகழும் கிரகணத்தால் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிக்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த கிரகணம் துலாம் ராசியில் கேது கிரஹஸ்த சூரிய கிரகணமாக நிகழ்கிறது. 2022ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் ஆகும். இந்த நான்கு கிரக சேர்க்கையின் போது ஏற்படும் கிரகணத்தினால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

இந்த ஆண்டில் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ம் தேதி நள்ளிரவு ஏற்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் அந்த கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை. இம்முறை சூரிய கிரகணம் பகல் நேரத்தில் நிகழ்வதால் இந்தியாவில் நன்றாக பார்க்க முடியும். கிரகண தோஷம் ஏற்படக்கூடாது என்பதற்காக பல கோவில்கள் 10 மணி நேரத்திற்கும் மேலாக மூடப்படுகின்றன.

சூரியனுடன் முக்கிய கிரகங்களான சுக்கிரன், கேது, சந்திரன் துலாம் ராசியில் கூட்டணி சேருவதால், புதிய யோகம் ஒன்று உருவாக போகிறது. துலாம் ராசியில் உள்ள கிரகங்களின் மீது சனிபகவானின் பார்வையும் விழுகிறது. சூரிய கிரகண நேரத்தில் சில காரியங்களை செய்யக்கூடாது எனவே எந்த ராசிக்காரர்கள் கிரகண தோஷங்களில் இருந்து தப்பிக்க பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

சூரிய கிரகணம்

சூரிய கிரகணம்

தமிழகத்தில் சூரிய கிரகணம் வரும் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் நிகழ உள்ளது. ஐப்பசி அமாவாசை நாளில் நிகழும் இந்த கிரகணம் நாடு முழுவதும் தென்படும். வழக்கமாக சூரிய கிரகணம் சந்திர கிரகண நாட்களில் கோவில்களில் நடை அடைக்கப்படும். இந்த ஆண்டும் நாடு முழுவதும் கோவில்களில் எந்த நேரத்தில் நடை அடைக்கப்படும் என்ற அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

 எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு

எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு

சூரிய கிரகணம் துலாம் ராசியில் நிகழ்வதால் திருவாதிரை, சித்திரை, சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், விசாகம், சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் கிரகண தோஷம் நீங்க பரிகாரம் செய்ய வேண்டும். தவிர மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம் ராசிகளில் பிறந்தவர்களும் கிரகண தோஷம் நீங்க பரிகாரம் செய்வது நல்லது.

துலாம்

துலாம்

துலாம் ராசியில் சூரிய கிரகணம் நிகழ்வதால் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது. இந்த நேரத்தில் பிறருக்கு கடனாக கொடுத்த பணத்தை இழக்கலாம். விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்பதால் கிரகண நாளில் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள் இருப்பது நல்லது. வாகனம் ஓட்டும்போது நிதானம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தேவையற்ற மன உளைச்சல் ஏற்படும். வேலையில் எச்சரிக்கை தேவை.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் கவனமாக செயல்பட வேண்டும். இல்லையெனில் நஷ்டம் ஏற்படும். முதலீடு செய்யாதீர்கள். வேலைகளை மாற்ற வேண்டாம். இந்த நேரம் தங்கள் உடல் நலத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு இந்த நேரம் சரியாக இல்லை என்றே சொல்லலாம்.

 சாப்பிடக்கூடாது

சாப்பிடக்கூடாது

கிரகண நேரத்தில் சமைப்பதோ சாப்பிடுவதோ கூடாது. வீட்டில் பிரிட்ஜில் வைத்திருக்கும் பொருட்களுக்கு தர்ப்பை போட்டு வைக்கலாம். தண்ணீரிலும், பால், தயிர், மளிகை, காய்கறிகளிலும் தர்ப்பை புல் போட்டு வைக்க தோஷம் நீங்கும்.

பரிகாரம் என்ன

பரிகாரம் என்ன

சூரிய கிரகணம் முடிந்த பின்னர் மாலை 6.30 மணிக்கு மேல் சிவ ஆலயங்களில் உள்ள நவகிரகங்களில் சூரிய பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சாற்றி கோதுமை பொங்கல், சர்க்கரை பொங்கல், நைவேத்தியம் படைத்து அரளிப்பூவினால் அர்ச்சனை செய்வது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+