நொடிக்கு நொடி திருப்பம்.. எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சந்திப்பு
சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமெடுத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியை அக்கட்சியின் தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சந்தித்து இருக்கிறார்.
ஜெயலலிதா மரணத்துக்கு பின் முதலமைச்சராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக நடத்திய தர்ம யுத்தத்தை தொடர்ந்து, முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டர் எடப்பாடி பழனிசாமி.
பல மாதங்களாக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று அதிமுக 2 பிரிவுகளாக செயல்பட்ட நிலையில், டெல்லியின் தலையீட்டால் 6 மாதத்தில் தர்மயுத்தத்தை நிறுத்திவிட்டு எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்தார் ஓ.பன்னீர்செல்வம்.

ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவே தொடர, அதிமுகவின் பொதுச்செயலாளராக யாரும் பொறுப்பேற்காமல் இருந்தனர். அதன் பின்னர் கட்சியின் புதிய உயர் பதவியாக ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்டு அது ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு எடப்பாடி பழனிசாமிக்கும் வழங்கப்பட்டன.

மோதல்
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிகாலம் நிறைவடைந்து திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அவர் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வானார். இருப்பினும் அவ்வப்போது எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தரப்புகளுக்கு இடையேயான மோதல் போக்கு வெளிச்சத்துக்கு வருவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மோதல் ஏற்பட்டது.

ஒற்றைத் தலைமை
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக விவாதிக்க மாவட்டச் செயலாளார்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் கூட்டப்பட்டது. அப்போது ஒற்றைத் தலைமை குறித்த விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு உள்ளேயே ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதம் செய்துகொண்டனர். ஒற்றை தலைமை குறித்து முழக்கங்களும் எழுப்பட்டன. அதன் பின்னர் இபிஎஸ் ஆதரவாளர் என்று கூறப்படும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதை வெளியே வந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசியதால் இப்பிரச்சனை பூதாகரம் எடுத்தது.

ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
கடந்த 16 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ஒற்றைத் தலைமை என்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம், இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்று கூறினார். இந்த நிலையில் இன்று காலை அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ் இருந்தபோது வெளியே குழுமி இருந்த அவரது ஆதரவாளர்களுக்கும் ஜெயக்குமார் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

மூத்த நிர்வாகிகளை சந்தித்த ஓபிஎஸ்
ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களை சந்தித்து பேசி வருகிறார். அத்துடன் முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அவரை சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். அதனை தொடர்ந்து எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் இருக்கும் மூத்த நிர்வாகியான பன்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆலோசனை கேட்டுப்பெற்று இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமியுடன் தமிழ்மகன் உசேன்
எடப்பாடி பழனிசாமியும் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் என பலரை சந்தித்து அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசித்து வருகிறார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சந்தித்து இருக்கிறார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்மகன் உசேன், "அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து தலைமைக் குழு முடிவு செய்யும்" என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
ஆமை புகுந்த வீடான அதிமுக.. ஆசை காட்டி மோசம் செய்த லீமா? வேதனையில் வேலுமணி.. ரெடியான சிவி சண்முகம்! -
“திமுக உதவியுடன் ஆட்சி!” எடப்பாடி பழனிசாமியின் கேம்.. தவெகவில் இணைய காரணத்தை சொன்ன எம்எல்ஏக்கள் -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
மூஞ்ச பாத்து ஓட்டு போட்டுருந்தா தெரிஞ்சுருக்கும்.. பாவம்! தவெகவை பங்கம் செய்த அதிமுக ஜெயக்குமார் -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
சினிமா போல ஒரே நாளில் நாட்டை மாற்ற முடியாது.. நடிகர் விஜய் குறித்து மதுரையில் வையாபுரி பேட்டி -
எடப்பாடினு சொன்னாலே பயம் வரனும்.. ஹோட்டல் மீட்டிங்கில் வெடித்த இபிஎஸ்! விஜய்க்கு லட்டு போல் சான்ஸ்! -
அதிமுக முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்.. எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி! -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர்












Click it and Unblock the Notifications