பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியீடு.. டவுன்லோடு செய்வது எப்படி? முழுவிபரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2023ல் தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ-மாணவர்களுக்கான பொதுத்தேர்வை சுமார் 8.8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ள நிலையில் நாளை முதல் ஹால்டிக்கெட் வினியோகம் செய்யப்பட உள்ளது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த ஹால்டிக்கெட்டை தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து நாளை மதியம் 2 மணிக்கு பிறகு டவுன்லோட் செய்து கொள்வது எப்படி? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் 2022-2023ம் கல்வி ஆண்டுக்கான 12ம் வகுப்பு (பிளஸ் 2) வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுக்கால அட்டவணை வெளியாகி உள்ளது. இந்த தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

அதன்படி மார்ச் மாதம் 13 தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு துவங்கி நடைபெற உள்ளது. இந்த தேர்வு ஏப்ரல் 3ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

மார்ச் 13ல் மொழிப்பாடம்

மார்ச் 13ல் மொழிப்பாடம்

அதன்படி மார்ச் 13ம் தேதி மொழிப்பாடம், மார்ச் 15ல் ஆங்கிலம் தேர்வு நடைபெற உள்ளது. மார்ச் 17 ம் தேதி கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், எத்திக்ஸ் மற்றும் இந்தியன் கல்சர், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்ட்ஸ் லங்குவேஜ் (தமிழ்), ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், ஸ்டேட்டிஸ்டிக்ஸ், நர்சிங் வோக்கேசினல், பேசிக் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பாடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

இயற்பியில், அக்கவுன்டன்சி தேர்வு

இயற்பியில், அக்கவுன்டன்சி தேர்வு

மார்ச் 21ல் இயற்பியல், எக்கனாமிக்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜிக்கும், மார்ச் 27 ம் தேதி கணிதம், விலங்கியல், காமர்ஸ், மைக்ரோ பயோலாஜி, அக்ரிகல்சூரல் சயின்ஸ் உள்ளிட்ட பாடங்களுக்கும், மார்ச் 31ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, பிசினஸ் கணிதம் மற்றும் ஸ்டேட்டிஸ்டிக்ஸ், பாட தேர்வுகள் நடைபெற உள்ளது. ஏப்ரல் 3ம் தேதி வேதியியல், அக்கவுன்டன்சி, ஜியோகிராபி பாடங்களுக்கான தேர்வுகளும் நடைபெற உள்ளது.

நாளை ஹால்டிக்கெட்

நாளை ஹால்டிக்கெட்

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொது தேர்வை சுமார் 8.8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். மொத்தம் 3,169 தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

டவுன்லோடு செய்வது எப்படி?

டவுன்லோடு செய்வது எப்படி?

அதன்படி நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். ஹால்டிக்கெட்டை https://dge1.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பிப்ரவரியில் செய்முறை தேர்வு

பிப்ரவரியில் செய்முறை தேர்வு

பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த மாதம் பிப்ரவரியில் செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. அதன்பிறகு மார்ச்சில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதுதவிர பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் மாதம் 14 முதல் ஏப்ரல் 5 வரையும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரையும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+