தமிழகத்தில் கொரோனா மின்னல் வேகம்.. ஒரே நாளில் 1437 பேருக்கு தொற்று.. சென்னையில் பெரும் உச்சம்!
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. : தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 1437 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,69,804 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 532 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 1437 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,69,804
ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 902 பேர் இன்று மீண்டனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8,48,041 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 8,619 இல் இருந்து 9,145 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பலி
தமிழகத்தில் கொரோனா தொற்றால் 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 12,618 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் 4 பேரும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா 2 பேரும் பலியாகி உள்ளனர்.

RT-PCR சோதனை
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக சோதனைகளை தமிழக அரசு விரைவுப்படுத்தி உள்ளது. அத்துடன் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இன்று 75,827 பேருக்கு RT-PCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் RT-PCR பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,86,10,138 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் 76,128 பரிசோதனைகள் இன்று மட்டும் நடத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை தமிழகத்தில் 1,89,30,484 RT-PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

மாவட்ட நிலவரம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்,. கோவை, தஞ்சாவூர், மதுரை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. சென்னையில் இன்று ஒரே நாளில் 532 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 146, செங்கல்பட்டில் 149 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகம்
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதிகமாக வருகிறது. மதுரை, சேலம், திருவாரூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. சென்னையில் 3441
பேர் சிகிச்சை பெறுகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 909
பேரும், கோவையில் 825 பேரும், தஞ்சாவூரில் 502 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்