சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

234 சட்டசபைத் தொகுதிகள்...சட்டசபைக்குள் நுழையும் பெண் எம்எல்ஏக்கள் எத்தனை பேர் தெரியுமா

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் வென்ற 234 எம்எல்ஏக்களில் 12 பேர் மட்டுமே பெண்கள் வெற்றி பெற்று சட்டசபைக்குள் செல்லப்போகின்றனர். இதில், 6 பேர் திமுக எம்.எல்.ஏக்கள். 3 பேர் அதிமுக எம்.எல்.ஏக்கள், பாஜக எம்.எல்.ஏக்கள் 2 பேர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் மட்டுமே சட்டசபைக்குள் செல்லப்போகிறார்.

பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு என்று பேசுகின்றனர் ஆனால் யாருமே 33 சதவிகிதம் இடம் ஒதுக்குவதில்லை. அப்படியே சீட் கொடுத்தாலும் அந்த பெண்ணின் கணவரோ, தந்தையோதான் அதிகாரம் மிக்கவர்களாக இருக்கின்றனர்.

நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக, திமுக,காங்கிரஸ் கட்சியைத் தேர்ந்த எம்எல்ஏக்கள் குறைந்த அளவிலேயே சட்டசபைக்குள் நுழையப்போகின்றனர்.

ஆஹா.. ஜஸ்ட் மிஸ்தான்.. அதிமுக எப்படி தோற்றிருக்கு பாருங்க.. எல்லாம் டிடிவி தினகரன் கட்சி செய்த வேலைஆஹா.. ஜஸ்ட் மிஸ்தான்.. அதிமுக எப்படி தோற்றிருக்கு பாருங்க.. எல்லாம் டிடிவி தினகரன் கட்சி செய்த வேலை

6 பெண் எம்எல்ஏக்கள்

6 பெண் எம்எல்ஏக்கள்

ஆளும் கட்சியாக அமரப்போகும் திமுகவில் குடியாத்தம் தொகுதி அமுலு, தாராபுரம் கயல்விழி, கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரி, மானாமதுரை தமிழரசி, தூத்துக்குடி கீதாஜீவான், செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன் ஆகிய 6 பேர் மட்டுமே சட்டசபைக்குள் செல்லப்போகின்றனர். இதில் 2 அல்லது 3 பேருக்கு அமைச்சர்கள் ஆகும் வாய்ப்பு கிடைக்கும்.

அதிமுகவில் 3 பேர்

அதிமுகவில் 3 பேர்

எதிர்கட்சி வரிசையில் அமரப்போகும் அதிமுக சார்பில் நிலக்கோட்டை (தனி) தேன்மொழி, மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமாரவேல் ஏற்காடு தொகுதியில் சித்ரா ஆகிய 3 பெண் உறுப்பினர்கள் மட்டுமே சட்டசபைக்கு செல்கின்றனர்.

கோவை தெற்கு, மொடக்குறிச்சி

கோவை தெற்கு, மொடக்குறிச்சி

பாஜக சார்பில் கோவை தெற்கு தொகுதியில் வென்ற வானதி சீனிவாசன், மொடக்குறிச்சி தொகுதியில் சட்டசபைத் தேர்தல் சரஸ்வதி ஆகிய 2 பேர் எம்எல்ஏக்களாக சட்டசபைக்கு செல்லப்போகின்றனர்.

சிங்கிள் பெண் எம்எல்ஏ

சிங்கிள் பெண் எம்எல்ஏ

காங்கிரஸ் கட்சி சார்பில் 18 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்ட விஜயதாரணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைகிறார். தமிழக சட்டசபை வரலாற்றி்லேயே 1991ல் நடந்த தேர்தலில்தான் அதிகபட்சமாக 32 பெண்கள் சட்டசபைக்கு தேர்வானார்கள். 234 தொகுதிகளில் குறைந்த பட்சம் 50 பெண் எம்எல்ஏக்களாவது சட்டசபைக்குள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். எப்போது அந்த நல்ல நாள் வருமோ.

English summary
A total of 12 female candidates were voted into power this Assembly elections. Out of the 234 MLAs who won the Tamil Nadu Assembly elections, only 12 are women who are going to enter the Assembly. Of these, 6 are DMK MLAs. 3 AIADMK MLAs and 2 BJP MLAs. Congress MLA Only one person is going to go into the assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X