பெரியார் பெயரில் பல்கலைக்கழகம்.. கேள்வித்தாள் ஜாதி பற்றி.. சமூக நீதியை பாருங்கள்.. அண்ணாமலை கிண்டல்
சென்னை: சேலம் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தேர்வு வினாத்தாளில் சாதி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதிய ரீதியாக கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையாகி உள்ளது. முதுகலை வரலாறு 2ம் ஆண்டு தேர்வுக்கான வினாத்தாளில், 4 சாதிப் பிரிவுகளைக் குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி? என கேள்வி இடம் பெற்றுள்ளது.

இந்தக் கேள்வி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து துணைவேந்தர் ஜெகநாதன் கூறுகையில், முதுகலை வரலாறு 2ம் ஆண்டு தேர்வு வினாத்தாள் பற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். வினாத்தாள் பிற பல்கலைக்கழக கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்டது. வினாத்தாள் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே படித்து பார்க்கும் வழக்கம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை கூறுகையில், ஒரு பக்கம் திமுக ஆட்சி என்கிறோம். சமூக நீதி என்கிறோம். ஆனால் திராவிடர் கழகத்தை தோற்றுவித்த பெரியாரின் பெயரில் இயங்கி வரும் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்வில் சாதி குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அப்படியென்றால் என்ன சமூக நீதியை திமுக பேசுகிறது. அங்கே பணிபுரியும் பேராசிரியர்கள் என்ன மனநிலையில் உள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஏற்கனவே விளக்கமளித்துள்ளார். இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் வருத்தமளிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக் கூடாது என்பதே பாஜகவின் கருத்து என்று தெரிவித்தார்.
Recommended Video
தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பாஜகவின் நேர்மையான தலைவர்களை கொண்டு செல்லும் வகையில் செயல்பட்டு வருகிறது. இப்போது எல்லாம் திமுக அமைச்சர்களுக்கு அதிகார திமிர் வந்துள்ளது. செல்லமாக மக்களை அடிக்கும் போக்கு நடைபெற்று வருகிறது. திமுக அமைச்சர்களான கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அன்பரசன் ஆகியோர் அதிகார மமதையில் இருக்கின்றனர் என்று குற்றம்சாட்டினார்.
-
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications