தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் திடீர் மாற்றம்! ஆர்எஸ்எஸ் மீட்டிங்கில் முடிவு
சென்னை: தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் அப்பதவியில் இருந்து திடீரென மாற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்த பதவி வகித்து வந்தவர் கேசவ விநாயகம். அண்ணாமலை தரப்பினர் புகார் தெரிவித்தநிலையில் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இரண்டு மாதம் கூட இல்லாத நிலையில் கேசவ விநாயகம் மாற்றப்பட்டுள்ளது அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கேசவ விநாயகம் திடீர் மாற்றம்?
பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாஜகவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பொறுப்பில் கேசவ விநயாகம் தான் இருந்து வந்தார்.
பாஜகவை பொறுத்தவரை அமைப்பு பொதுச்செயலளர் பொறுப்பு முக்கியமனதாக பார்க்கப்படுகிறது. அதாவது, பாஜக - ஆர்.எஸ்.எஸ் இடையே பாலம் போல செயல்படும் முக்கியமான பொறுப்பாக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு இருக்க கூடிய நிலையில், தற்போது கேசவ விநாயகம் மாற்றப்பட்டுளார். தேர்தல் நெருங்கும் நிலையில் அவரது மாற்றம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அண்ணாமலை தரப்பு மோதல்
தமிழக பாஜக முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை தரப்புக்கும் கேசவ விநாயகம் தரப்புக்கும் மோதல் போக்கு நீடித்து வந்ததாக சொல்லப்பட்ட நிலையில், கேசவ விநாயகம் மாற்றப்பட்டுள்ளார். கேசவ விநாயகத்திற்கு ஆர்.எஸ்.எஸ்சில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இதேபோன்று விரைவில் தமிழக பாஜக பொதுச்செயலாளர் பதவிக்கு புதியவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வரை அமைப்பு செயலாளர் பொறுப்பினை கூட்டுத் தலைமையின் கீழ் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த கூட்டத்தின் போது புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி மாற்றம் ஏற்படுவது, அந்த கட்சியினை விட ஆர்.எஸ்.எஸ்க்கு முக்கியம் என்று அதன் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நான் ஆர்எஸ்எஸ் தொண்டன்
ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு இது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குக் கேசவ விநாயகம், "நான் ஆர்எஸ்எஸ் தொண்டர். மாற்றம் இயல்பானது" என்று மட்டும் பதிலளித்துச் சென்றார்
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications