காதல்.. பெண்ணுக்கும் பெண்ணுக்கும் திருமணம்.. சென்னையில் வினோதம்.. பின்னணியில் உள்ள காரணம் இதுதான்
சென்னை: சென்னையில் தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர் வங்கதேசத்தை சேர்ந்த பெண்ணை பிராமிண் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் வெளியாகி உள்ளது.
இந்தியா உள்பட தற்போது பல நாடுகளில் திருமண முறை என்பது மாறி வருகிறது. ஆண்-பெண் திருமணம் நடந்தாலும் கூட சிலர் தன்னைத்தானே ‛சோலோகாமி' திருமணம் செய்து கொள்கின்றனர். சமீபத்தில் கூட குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர் ‛சோலாகாமி' எனும் மாப்பிள்ளை இல்லாத திருமணத்தை செய்தார்.
இதுதவிர ஒருவருக்கொருவர் அன்பாக உள்ள இரு பெண்கள், இரு ஆண்கள் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது இரு பெண்கள் சென்னையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதுபற்றிய விபரம் வருமாறு:

கனடாவில் வசிக்கும் குடும்பம்
கனடாவில் வசித்து வருபவர் சுபிக்சா. பட்டயக்கணக்கராக உள்ள இவர் பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர். இவர் தனது குடும்பத்துடன் கனடாவில் உள்ள கல்கரியில் வசித்து வருகிறார். இதேபோல் அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்த இந்து பெண் டினா தாஸ். இவரும் தனது குடும்பத்துடன் கனடாவில் உள்ள கல்கரியில் வசித்து வருகிறார்.

6 ஆண்டுக்கு முன்பு பழக்கம்
இவர்கள் 2 பேருக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் வளர்ந்தது. சுபிக்சா Bisexual என்பதும் டினா தாஸ் Lesbian என்பதும் தெரியவந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டனர். இந்நிலையில் இவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

சென்னையில் திருமணம்
அதன்படி சென்னையில் பிராமிண் முறைப்படி இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். சுபிக்சா தனது தந்தையின் மடியில் அமர்ந்து டினா தாஸை கரம் பிடித்தார். இந்த திருமணத்தில் டினா தாஸின் குடும்பத்தினரும், சமஸ்கிருத அறிஞரும் பேராசிரியருமான சவுரப் போண்ட்ரே ஆகியோர் பங்கேற்றனர்.

ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக உணர்கிறேன்
இதுபற்றி சுபிக்சா கூறுகையில், ‛‛எங்களின் கனவு நனவாகும் என்று நாங்கள் இருவரும் எதிர்பார்க்கவே இல்லை. தற்போது அது நடந்துள்ளது. 6 ஆண்டு போராட்டத்துக்கு பிறகு எங்கள் அன்புக்குரியவர்களின் முன்னிலையில் திருமணம் செய்து ஒவ்வொரு சடங்குகளையும் முறையாக மேற்கொண்டு திருமணம் செய்துள்ளோம். நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக உணர்கிறேன்.

டினா தாஸ் கூறுவது என்ன
சுபிக்சாவின் ஜோடியான டினா தாஸ் ஏற்கனவே ஆண் ஒருவருடன் திருமணமான நிலையில் அந்த உறவில் இருந்து வெளியேறி இருந்தார். தற்போது டினா தாஸ் கூறுகையில், ‛‛நான் வடகிழக்கு வங்கதேசத்தில் உள்ள மவுல்விபஜாரில் வளர்ந்தேன். நானும் எனது பெற்றோரும் 2003ல் மாண்ட்ரீலுக்கு சென்று தற்போது கனடாவில் வசித்து வருகிறோம். எனது பெற்றோர் LGBTQI+ சமூகம் பற்றி அறிந்தது இல்லை. மேலும் எனக்கு நோய் இருப்பதாக அவர்கள் நினைத்தனர். 19 வயதாக இருந்தபோது ஒரு ஆணுடன் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். வைத்தால் அது சரியாகிவிடும் என நினைத்தனர். தற்போது என்னுடன் அக்காள் உறவை துண்டித்துள்ளார். அவரது குடும்பமும் தள்ளி சென்றுள்ளது'' என்றார்.

சுபிக்சாவின் தாய் கூறுவது என்ன?
இதுபற்றி சுபிக்சாவின் தாய் கூறுகையில், ‛‛நான் மதுரையில் வளர்ந்தேன். அதன்பின் கத்தார் சென்றோம். தற்போது கனடாவில் வசிக்கிறோம். இந்த வேளையில் தான் குயர் சமூகம் பற்றி அறிந்து கொண்டோம். இந்த திருமணத்துக்கு முன்பு எங்களுடைய முதல் மற்றும் மிகப்பெரிய பயம் என்னவென்றால் இந்தியாவில் உள்ள எங்கள் குடும்பம் உறவுகளை துண்டித்து விடுவார்கள் என்பது தான். மேலும் சுபிக்சா எப்படி இந்த சமூகத்தில் வாழ்வார். தாய்மையை எப்படி அடைவார் என்பது அடுத்த பயமாக இருந்தது. இருப்பினும் எங்கள் மகள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் உறவினர்களுடன் ஒன்றாக இருந்து என்ன செய்வது? என்ற கேள்வி எழுந்தது. இதனால் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டோம்'' என மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

சுபிக்சாவின் பாட்டி கூறுவது என்ன?
சுபிக்சாவின் 84 வயது பாட்டி கூறுகையில், ‛‛எங்கள் மருமகள் கொஞ்சம் ஹிந்தி, ஆங்கிலத்தில் பேசி தொடர்பில் இருந்தார். யாருக்கும் பயப்படாமல் அன்பதை மட்டுமே தேர்வு செய்வது முக்கியம். விரக்தியடைந்து குழந்தைகளை விட்டு விலகி செல்வதை விட அவர்களை பக்கத்தில் மகிழ்ச்சியாக வைக்க முடிவு செய்தோம்'' என்றார்.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
இதையா கொடுத்தாங்க? தாம்பூலப் பையை திறந்து பார்த்த உறவினர்கள் ஷாக்! திருநெல்வேலியில் அந்த சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications