'காவல்துறையின் தரத்தை மீட்டெடுப்பதே நோக்கம்...' ரூ 8,930 கோடியை ஒதுக்கீடு செய்த அமைச்சர் பிடிஆர்
சென்னை: நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகள் காரணமாக அரசுக்குச் சொந்தமான நிலங்களின் வளங்கள் உடனடியாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதைச் சரி செய்யப் புதிதாக வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு அமைக்கப்படும் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்,

அதில் விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ள அவர், காவல்துறைக்கு ரூ 8,930 கோடியும், தீயணைப்புத் துறைக்கு ரூ 405.13 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்
இது குறித்து அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், காவல்துறையில் உள்ள 133198 இடங்களில் 14,317 காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்களைத் தண்டிக்கும் வகையில் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையின் தரத்தை மீட்டெடுப்பது தான் நோக்கம். பெண்கள் குழந்தைகளுக்கான குற்றங்களை விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் ஒட்டுமொத்தமாக காவல்துறைக்கு ரூ 8,930 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தடுக்கப்படக் கூடிய விபத்துகள் காரணமாகக் கணிசமான பொருளாதார பாதிப்புகளும் உயிர் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தீ விபத்து பாதுகாப்பு செயலாக்க நடவடிக்கை வாயிலாக தீ விபத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்காக 1985 தீயணைப்பு சேவைகள் சட்டம் மாற்றியமைக்கப்படும். மீட்புப் படையினர் குறைவான விபத்து ஏற்படும் இடங்களுக்கு மீட்புப் படையினர் செல்வதை உறுதி செய்யும் விதமாக புதிய தீயணைப்பு நிலையங்களின் இடங்கள் அறிவியல் உதவியுடன் தேர்வு செய்யப்படும். தீயணைப்புத் துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ 405.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
விபத்துகளற்ற தமிழ்நாடு தான் இந்த அரசின் நோக்கம். விபத்துகள் குறைந்து வந்தாலும்கூட ஒட்டுமொத்த விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. கொரோனா ஊரடங்கு சமயத்தில்கூட 45 ஆயிரம் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 8000 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துகளைக் குறைக்க நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, மருத்துவம், கல்வி பல்வேறு துறைகளை உள்ளடக்கி ஒருங்கிணைந்த பாதுகாப்பு இயக்கம் மாற்றியமைக்கப்படும்.
Recommended Video
போக்குவரத்து ஆணையரகம் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்படும். இதற்காக ரூ 500 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்றார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications