தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: எந்த மாதிரி முன்னெச்சரிக்கைகள் தேவை? முதல்வர் நடத்திய முக்கிய ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி முக்கிய விஷயங்கள் குறித்து தகவல்களை கேட்டறிந்துள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். கேரள மாநில எல்லையில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், முதல்வர் இதில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், பள்ளி உயர் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்
அதேநேரம், மாணவ, மாணவிகளின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில், செப்டம்பர் 6ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முறை ஊரடங்கில் நிறைய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. கடற்கரைக்கு பொது மக்கள் செல்ல அனுமதி, தியேட்டர்கள் திறப்பு என பல்வேறு தளர்வுகள் தரப்பட்டுள்ளன.

பள்ளிகள் திறப்பு
கொரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளதால், செப்டம்பர் 1ம் தேதியான வரும் புதன்கிழமை முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்களுக்குச் செயல்படும் என்று அரசு கூறியுள்ளது. 50 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாணவர்களை பேட்ஜ் முறையில் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை
பிற வகுப்புகள் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் ஆலோசனை
இந்நிலையில், பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய் பேரிடர் துறை உயர் அதிகாரிகள், வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கொரோனா அறிகுறி உள்ள மாணவர்களை எவ்வாறு கண்டறிவது, அவர்களுக்கு உடனே சிகிச்சை அளிக்க என்னென்ன வசதிகள் செய்யப்படும் என்று ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் அதன் அருகில் உள்ள மருத்துவமனை டாக்டர்களின் தொலைபேசி எண்கள் கட்டாயம் எழுதி வைத்திருக்க வேண்டும் என்று ஆலோசனையில் கருத்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கேரள எல்லையில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஊரக உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

முன்னெச்சரிக்கை தடுப்பு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், சில மாநிலங்களில் மட்டும் 10, 12ஆம் வகுப்புத் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தது. ஆனால், மாணவர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டன.

மாணவர்கள் நலன்
இதனால், கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகள் நடக்காமலேயே மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக வீட்டிலேயே ஆன் லைன் வகுப்புகளைப் படித்து முடங்கி இருக்கும் மாணவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே பள்ளிகளை திறக்கும் முடிவுக்கு அரசு வந்துள்ளது.

எச்சரிக்கும் மருத்துவர்
அதேநேரம், எய்ம்ஸ் மருத்துவர் நவீத் விக், பள்ளிகளை திறப்பதால் மாணவர்களுக்கு கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளார். எனவேதான் தமிழக அரசு ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தமிழகத்தில் ஆசிரியர்களில் 90.11 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதேபோல, புதன்கிழமை கல்லூரிகள் திறக்கப்படும் போது அனைத்து மாணவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுதான் கல்லூரிக்கு வர வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிருமிநாசினி
பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கு இன்றும், நாளையும் என 2 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளதால், பள்ளி, கல்லூரிகளை கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரகதியில் நடந்து வருகின்றன.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications