ஒரே நாடு ஒரே தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரானது, மாநிலங்களின் குரல்களை ஒடுக்கும்: ஸ்டாலின் கண்டனம்
சென்னை: மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இப்போது நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடரிலேயே அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்திருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இதற்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
டெல்லியில் இப்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் அதானி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது.

இருப்பினும், மத்திய அரசு இதில் பல முக்கிய மசோதாக்களை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை இந்த கூட்டத்தொடரிலேயே மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.. அதாவது லோக்சபா தேர்தல் மற்றும் அனைத்து மாநிலச் சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதே இதன் நோக்கமாகும்.
இந்த மசோதாவுக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலளித்திருந்த நிலையில், அதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை ஒழிக்கும் என்று கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் இது மாநிலங்களின் குரல்களை ஒடுக்கச் செய்யும் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், "ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா என்ற மோசமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதைச் செயல்படுத்த முடியாது.. இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையானது பிராந்தியக் குரல்களை அழித்து, கூட்டாட்சித் தத்துவதைச் சிதைத்து, ஆட்சியைச் சீர்குலைக்கும். இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை முழு பலத்துடன் எதிர்ப்போம்" என்று பதிவிட்டுள்ளார். கூடவே SayNoToONOE என்ற ஹேஷ்டேக்கையும் அவர் சேர்த்து இருக்கிறார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications