Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘டியூசன் அக்கா’ திட்டத்தை வாக்குறுதியாக அறிவித்த காங்கிரஸ்.. அப்படினா என்ன? மாணவர்களுக்கு ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்த தேர்தல் அறிக்கையில் மாணவ-மாணவிகளுக்காக 'டியூசன் அக்கா' திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 'டியூசன் அக்கா' திட்டம் என்பது என்ன? என்னென்ன பயன்கள் கிடைக்கும்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 28 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்துக்கான தேர்தல் வாக்குறுதிகளை இன்று காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.

Tamil Nadu Cogress Manifesto

கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது.

'டியூசன் அக்கா' திட்டம்

அதில் முக்கியமான அறிவிப்பு தான் 'டியூசன் அக்கா' திட்டம். இந்த திட்டம் மாணவ-மாணவிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது பள்ளிக்கு பிறகு மாணவ-மாணவிகளுக்கு கல்விசார்ந்த ஆதரவுகளை வழங்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 4 மொத்தம் முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. மொத்தம் 10 பிரிவுகளில் 50 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

திட்டத்தின் நோக்கம் என்ன?

* பள்ளிக்கு பிறகான தனிப்பயிற்சிக்கு, படித்த உள்ளூர் பெண்களை பணியமர்த்துதல்
* சிறப்பு பார்வை: கற்றல் இடைவெளிகளை கொண்ட அரசு பள்ளி மாணவர்கள்
* அடிப்படை கற்றல் தரவுகளை மேம்படுத்துதல்
* படித்த உள்ளூர் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் என்ற முக்கியஅம்சங்களை கொண்டுள்ளது.

அதன்படி பார்த்தால் பள்ளி படிப்பை முடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தனிப்பயிற்சி வழங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, அரசு பள்ளியில் கற்றல் இடைவெளியை குறைக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவற்றை மையமாக இந்த திட்டம் கொண்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி - யுபிஎஸ்சி பயிற்சி

இதுதவிர காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கல்வி மற்றும் இளைஞர் முன்னேற்றம் என்ற பிரிவின் கீழ் இன்னும் சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி குறைந்த வருவாய் குடும்ப மாணவர்களுக்கு ஒவ்வொரு மாணவர்களுக்கும் கட்டணமின்றி தரமான பயிற்சி பெற பயிற்சி மையங்கள் அமைககப்படும். அங்கு நேரடி மற்றும் இணையவழி முறையில் பயிற்சி வழங்கப்படும். டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி அல்லது அனைத்து அரசு தேர்வுக்கு தயாராவோர் இதில் பயனடைவார்கள்.

செயற்கை நுண்ணறிவுடன் கற்றல்

அனைத்து அரசு பள்ளிகளிலும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் கற்றல் திறன் கருவிகள் வழங்கப்படும். கணிதம், அறிவியல் மற்றும் மொழி மேம்பாட்டுக்கு இந்த கருவிகள் பயன்படுத்தப்படும். அனைத்து அரசு ஆசிரியர்களுக்கும் கட்டாய டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயிற்சி வழங்கப்படும். மாவட்ட அளவில் ஆசிரியர் பயிற்சி மையங்கள் நிறுவப்படும்.

மண்டல வாரியாக தனிச்சிறப்பு பள்ளிகள்

மேலும் 6 மண்டல தனிச்சிறப்பு பள்ளிகள் நிறுவப்படும். இங்கு தமிழ்நாடு முழுவதும் தகுதி அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும். இருமொழி கொள்கையை பின்பற்றி வலுவான தமிழ் அடித்தளத்துடுன் ஆங்கில வழிக்கல்வி கொடுக்கப்படும்.

உயர்தரமான கற்பித்தல் + போட்டி தேர்வுக்கான கற்பித்தல் செயல்படுத்தப்படும். நவீன உள்கட்டமைப்பு மற்றும் களப்பயணங்கள் இருக்கும். அனைத்து விமான பின்னணியில் இருந்து வரும் திறமையாளர்களுக்கும் உலக தரத்திலான எதிர்காலத்தை வழங்க இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்பது உள்பட பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+