Corona Update in Tamil Nadu: புதிதாக 5,185 பேருக்கு கொரோனா தொற்று... உயிரிழப்பு 68 ஆக பதிவு!!
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 5,185 கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1288 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரைக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 5,91,811 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழத்தில் இதுவரைக்கும் 6,46,128 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்னும் தமிழகத்தில் 44,197 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் தமிழகத்தில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் தனியார் மருத்துவமனைகளில் 34 பேரும், அரசு மருத்துவமனையில் 34 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 5,357 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரைக்கும் தமிழகத்தில் 5,91,811 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக இன்னும் 13,446 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து கோவையில் 4,746 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையை அடுத்து கோவையில் இன்று 397 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
Tamil Nadu reports 5,185 new #COVID19 cases, 5,357 discharges and 68 deaths today. Total cases in the state rise to 6,46,128, including 44,197 active cases, 5,91,811 discharges and 10,120 deaths: Health and Family Welfare Department, Government of Tamil Nadu pic.twitter.com/cqyKK5jllF
— ANI (@ANI) October 9, 2020
இன்று தமிழகத்தில் 95,301 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதுவரைக்கும் 79,06,698 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் தொற்று பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றாலும், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால், இடையில் குறைந்து இருந்த தொற்று எண்ணிக்கை சென்னை, கோவை போன்ற நகரங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications