தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு பாதிப்பு.. 20,000 பேர் வரை பாதிக்கப்படலாம்! சுகாதாரத்துறை வார்னிங்
சென்னை: தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளும் அதிகரித்துள்ளன. குறிப்பாக டெங்கு பாதிப்பு தீவிரமாக மாறியிருக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு 20 ஆயிரத்தை எட்டும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் இறுதியில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தற்போது பருவமழை உச்சத்தை எட்டியிருக்கிறது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை எனில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில்தான் தீவிரமாக இருக்கும். இந்த முறை சென்னை உட்பட வடமாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகமாக இருக்கிறது. எனவே, புதிய வகை வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

சென்னையில் கடந்த 10 நாட்களாக ஏராளமான மக்கள் புதிய காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சாதாரண காய்ச்சல் எனில் 3 நாட்களில் சரியாகிவிடும். ஆனால், இந்த காய்ச்சல் 7 நாட்கள் வரை நீடிக்கிறது. ஆளை முற்றிலுமாக உலுக்கி எடுத்துவிடுகிறது. எந்த வேலையையும் செய்ய முடியாமல் சோர்வாகவே இருக்க வைத்துவிடுகிறது. இது தவிர டெங்கு பாதிப்பும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திடீரென பெய்யும் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, அவை டெங்கு காய்ச்சலை பரப்புகின்றன.
தமிழகத்தில் தினசரி 60-70 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 14,000க்கும் அதிகமானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் 7 பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள் என்றும் சுகாதாரத்துறை வெளியிட்டு இருக்கக்கூடிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இனிவரும் நாட்களில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் ஏறத்தாழ 20,000 பேர் வரை கூட டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படலாம் என்றும் துறை சார்பில் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
இது தவிர இன்ப்ளுயன்சா பாதிப்புகளும் டெங்கு காய்ச்சலை போல பொதுவான அறிகுறிகளுடன் இருக்கும். சாதாரண காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், உடல் வலி, சோர்வு ஆகியவற்றின் அறிகுறி உடன் இது காணப்படும் என்றும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
எனவே காய்ச்சல் இருந்து சாதாரண மருந்து எடுத்து 24 மணி நேரத்திற்குள் காய்ச்சல் குறையாவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும் தும்மும் போதும் நீர் திவளைகள் மூலம் காய்ச்சல் பரவுவதை தடுக்க கர்சிப் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல வெளியே செல்லும்போதும், மக்கள் கூட்டத்தில் நிற்கும் போதும் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
டெங்கு காய்ச்சல் வந்தால், உடலில் நீர் சத்து வேகமாக குறைத்து விடும். எனவே அடிக்கடி நீர் அருந்துவது முக்கியமானது. தண்ணீர் மட்டுமல்லாது ஓஆர்எஸ் பவுடர் கலக்கப்பட்ட நீரையும், எலெக்ட்ரோல் பவுடர் கலக்கப்பட்ட நீரையும் எடுத்துக் கொள்ள வேண்டும். தவிர வீடுகளுக்கு அருகில் உள்ள மூடப்படாத தொட்டிகள், உடைந்த குடங்கள், தேங்காய் ஓடுகள், டயர்கள் போன்றவற்றில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications