சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு.. ஆகஸ்ட் 25முதல் ஆரம்பம்..110 இலவச மையங்கள் தயார்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு உதவ தமிழக அரசு சார்பில் 51 இலவச மையங்கள் இருந்த நிலையில், தற்போது 110 இலவச மையங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புகளில் சேர பள்ளிகள் வாயிலாகவும், மாநிலம் முழுவதும் சிறப்பு மையங்கள் வாயிலாகவும் கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 27ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். மொத்தம் 2 லட்சத்து 11 ஆயிரத்து 115 மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

Tamil nadu Engineering Counselling 2022 start from 25th August 110 free centers ready

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியானதால், பொறியியல் கலந்தாய்வுத் தேதிகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 1ஆம் தேதி டிஎஃப்சி மையங்களில் தொடங்கியது.

சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர், ஆகஸ்ட் 16ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாக உள்ளது. இதில் குறைகள் / சந்தேகம் இருந்தால், ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை நிவர்த்தி செய்துகொள்ளலாம்.

இதற்கிடையே சிறப்புப் பிரிவினரான மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய 3 பிரிவினருக்கும் 16.08.2022 அன்று கலந்தாய்வு தொடங்குவதாக இருந்தது. இந்த நிலையில், கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டு 20ஆம் தேதி தொடங்குகிறது. அதேபோல பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்குகிறது.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு - சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடக்கம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு - சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடக்கம்

நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத சூழலில் தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில், புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்குகிறது.

அக்டோபர் 21ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறுகிறது. அதையடுத்து துணைக் கலந்தாய்வு அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கி, 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொறியியல் கலந்தாய்வு அக்டோபர் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்குகிறது.

கடந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு உதவ தமிழக அரசு சார்பில் 51 இலவச மையங்கள் இருந்த நிலையில், தற்போது 110 இலவச மையங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

English summary
The counseling for general category for admission to engineering courses in Tamil Nadu starts on 25th August. Last year there were 51 free centers on behalf of the Tamil Nadu government to help the admission consultation of engineering students, now it has been increased to 110 free centers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X