அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகள்.. தமிழக அரசு தடை விதித்து அரசாணை
சென்னை: தற்கொலைக்கான வாய்ப்பை குறைக்கும் வகையில் அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அசிபேட், மோனோக்ரோடோபோஸ், க்ளோர்பைரிபோஸ் உள்ளிட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. தற்கொலைக்கான வாய்ப்பை குறைக்கும் வகையில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அசிபேட், மோனோக்ரோடோபோஸ், க்ளோர்பைரிபோஸ் உள்ளிட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 2 லட்சம் பேர் பூச்சிக்கொல்லி மருந்துகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்கின்றனர்.
பூச்சிக்கொல்லி மருந்துகள் எளிதாக கிடைப்பதை தடுக்கும் வகையில் உலக நாடுகள் கடும் விதிமுறைகளை செயற்படுத்த வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துகிறது.
1990களிலேயே உலகம் முழுவதும் பூச்சிக்கொல்லி மருந்துகளை குடித்து தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிட்ட போதிலும், ஆசிய கண்டத்திலுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய ஊரகப் பகுதிகளில் இதன் பயன்பாடு இன்னும் குறைந்தபாடில்லை.
1980 மற்றும் 1990களில் உலகிலேயே பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி அதிக தற்கொலைகள் நிகழும் நாடுகளில் ஒன்றாக இலங்கை விளங்கியது.
2015ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 1,34,000 பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளதாகவும், அதில் 24,0000 பேரின் இறப்புக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளே காரணம் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
2012ஆம் ஆண்டு தென் கொரியாவில் அதிக நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்து தடைசெய்யப்பட்ட உடனேயே, அந்நாட்டில் பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டு தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை உடனடியாக குறைந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் தற்கொலைக்கான வாய்ப்பை குறைக்கும் வகையில் அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அசிபேட், மோனோக்ரோடோபோஸ், க்ளோர்பைரிபோஸ் உள்ளிட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications