கொரோனா ஊரடங்கு.. அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலம் சிறப்பு விடுப்பாக அறிவிப்பு.. தமிழக அரசு அரசாணை!
கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக தமிழ்நாடு அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதேபோல், 2020 மார்ச் 25 முதல் ஜூன் 30 வரை அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை சிறப்பு விடுப்பாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பின்னர் உலகம் முழுவதும் வேகமாக பரவி சமூக பொருளாதார இழப்பை அதிகளவில் ஏற்படுத்தியது. இந்தியாவிலும் சுமார் மூன்று ஆண்டுகள் கொரோனா வைரஸ் பரவலால் பல்வேறு இழப்புகளை சந்திக்க நேர்ந்தது.

இதையடுத்து லட்சக்கணக்கான மக்கள் கொரோனா காரணமாக உயிரிழந்த நிலையில், பாதிப்பு எண்ணிக்கை மிகத் தீவிரமாக இருந்தது. நீண்ட நாட்களுக்கு பொதுமக்கள் வெளியே வர முடியாத சூழல் நிலவியது.
இதனையடுத்து கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டது. இதன் பின்னர் தீவிர தடுப்பூசி நடவடிக்கைகள் மூலம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. தடுப்பூசி நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்னரே, படிப்படியாக ஊரடங்கு உத்தரவுகள் குறைக்கப்பட்டன. தற்போது சுமூக சூழல் நிலவி வருகிறது.
2020ம் ஆண்டு மார்ச் 25 முதல் ஜூன் 30 வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அரசுப் பணியாளர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அப்போது கொரோனா பரவல் அதிகரித்திருந்த சூழலில், அதனை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே ஒரே வழியாக பார்க்கப்பட்டது. கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக அரசு ஊழியர்கள் பணிக்கு வராமல் இருந்தனர்.
இதனால் கொரோனா காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக அறிவிக்க அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில், 2020ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை சிறப்பு விடுப்பாக அறிவிக்கப்படுகிறது. அதேபோல் கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications