Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கல்..உப்புமா..கேசரி..அரசுப் பள்ளிகளில் 1- 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி.. மெனு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எந்த நாட்களில் என்ன மாதிரியான உணவுகளை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 7ஆம் தேதி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும்; 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் கொண்டுவரப்படும். முதற்கட்டமாக மாநகராட்சி, தொலைதூர கிராமங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, படிப்படியாக விரிவு செய்யப்படும் என்று அறிவித்தார்.

இதை தொடர்ந்து 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்ககல்வி மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியது.

15 மாவட்ட அரசு பள்ளிகளில் 292 கிராம பஞ்சாயத்துகளில் பரிசுத்தமான முறையில் திட்டம் தொடங்கப்படும் இத்திட்டமானது அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

காலை சிற்றுண்டி அரசாணை

காலை சிற்றுண்டி அரசாணை

இந்நிலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கான - அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டமானது தமிழ்நாடு முதலமைச்சரால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளில், விதி எண். 110-ன் கீழ் வெளியிடப்பட்டது. அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்குதல் முதற்கட்டமாக செயல்படுத்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

 காலை உணவை தவிர்க்க வேண்டாம்

காலை உணவை தவிர்க்க வேண்டாம்

சென்னையில் இன்று பள்ளி மாணவர்கள் மத்தியில் பேறிய முதல்வர் மு.க ஸ்டாலின், காலை உணவை தவிர்க்க வேண்டாம். நன்றாக சாப்பிட்டு உடல் ஆரோக்கியமாக இருந்தால் தன்னம்பிக்கையோடு படிக்கலாம் என்றும் தெரிவித்தார். காலை உணவு வழங்கும் திட்டத்திற்கு கையெழுத்து போட்டிருப்பதாகவும் கூறினார். பள்ளி நாட்களில் தினசரி ஏதாவது ஒரு உணவு வழங்க வேண்டும் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 1,14,095 மாணவர்களுக்கு காலை உணவு

1,14,095 மாணவர்களுக்கு காலை உணவு

இதன்மூலம் தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 1,545 பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் விரைவில் வசெயல்படுத்தப்பட உள்ளது. 'பசிப்பிணி மருத்துவர்' என்ற புறநானுற்றுப் பாடலை மேற்கோள்கட்டி காலை சிற்றுண்டி திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்

வழிகாட்டு நெறிமுறைகள்

தொடக்கப் பள்ளி மாணவ/மாணவியருக்கு காலை உணவு வழங்குதல் குறிக்கோள்:

மாணவ/ மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதிசெய்தல், மாணவ / மாணவியர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தலை உறுதி செய்தல், மாணவ / மாணவியரின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், குறிப்பாக இரத்த சோகை குறைபாட்டினை நீக்குதல், பள்ளிகளில் மாணவ / மாணவியர்களின் வருகையை அதிகரித்தல்/ தக்க வைத்துக் கொள்ளுதல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல்.

 காலை உணவு வகைகள் :

காலை உணவு வகைகள் :

பல்வேறு விதமான சிற்றுண்டி வகைகளில் ஏதேனும் ஒன்றை குறிப்பிட்டுள்ள நாட்களில் வழங்க வேண்டும். திங்கட்கிழமையில் உப்புமா வகை. ரவா உப்புமா உடன் காய்கறி சாம்பார் அல்லது சேமியா உப்புமா உடன் காய்கறி சாம்பார், கோதுமை ரவா உப்புமா உடன் காய்கறி சாம்பார். செவ்வாய்க்கிழமையில் கிச்சடி வகை. ரவா கிச்சடி சேமியா காய்கறி கிச்சடி அல்லது சோள காய்கறி கிச்சடி அல்லது கோதுமை ரவா காய்கறி கிச்சடி

பொங்கல் சாம்பார்

பொங்கல் சாம்பார்

புதன்கிழமை பொங்கல் வகை, ரவா பொங்கல் உடன் காய்கறி சாம்பார் அல்லது வெண் பொங்கல் உடன் காய்கறி சாம்பார். வியாழக்கிழமையில் சேமியா வகை: சேமியா உப்புமா உடன் காய்கறி சாம்பார் அல்லது அரிசி உப்புமா உடன் காய்கறி சாம்பார் அல்லது ரவா உப்புமா உடன் காய்கறி சாம்பார், கோதுமை ரவா உப்புமா உடன் காய்கறி சாம்பார் கொடுக்க வேண்டும்.

சிறுதானியங்கள்

சிறுதானியங்கள்


வெள்ளிக்கிழமை ஏதாவது ஒரு கிச்சடி வகையுடன் செவ்வாய்க்கிழமை உணவு வகையின்படி ரவா கேசரி சேமியா கேசரி வழங்கப்படும். ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி / ரவை/கோதுமை ரவை / சேமியா / உள்ளூரில் / அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள் / மற்றும் சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் உள்ளூரில் கிடைக்கக் கூடிய காய்கறிகள் சமைத்த பின் 150 - 200 கிராம் உணவு மற்றும் 60 மி.கி காய்கறியுடன் கூடிய சாம்பார் . ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக் கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+