பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பு: மக்களுக்கு மாற்று இடம் வழங்க பரிசீலனை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை காலி செய்வது தொடர்பாக உத்தரவாதம் அளித்தால், மாற்று இடம் வழங்குவது குறித்து பரிசீலிக்க தயார் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டபட்டுள்ளதாக ஐ.எஸ்.சேகர் என்ற நபர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2015ஆம் ஆண்டு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சோழிங்கநல்லூர் வட்டாச்சியர் மணிசேகர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் குடியிருப்புகளை அகற்ற வந்தனர்.

மக்கள் போராட்டம்
மக்கள் வசித்து வரும் குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெத்தேல்நகர் பகுதியை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட சுமார் 500 க்கும் மேற்பட்டோர் பெத்தேல்நகர் பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 30 வருடங்களாக இந்த பகுதியில் வசித்து வரும் அவர்களுக்கு அரசு சார்பில் மின்சாரம், குடிநீர் இணைப்பு, சாலை, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து சலுகையும் அரசு செய்துவிட்டு தற்பொழுது இந்த இடத்தை ஆக்கிரமிப்பு என்று கூறினால் நாங்கள் எங்கு செல்வது என்ற கேள்வியை முன் வைக்கின்றனர்.

பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பு
பெத்தேல்நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் அண்ணாதுரை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வீடில்லா ஏழை மக்கள் வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர், தமிழக அரசு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். வீட்டு வரி, குடிநீர் கட்டணம், மின்சார கட்டணம் உள்ளிட்ட வரிகளை செலுத்தி வருவதாகவும், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும், அரசு உதவிகளும் வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

பட்டா வழங்க கோரிக்கை
இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவிடப்பட்டதால், மக்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், எந்த நேரத்திலும் வீடுகள் இடிக்கப்படலாம் என்பதால், தங்களை வெளியேற்ற தடை விதிக்க வேண்டும் எனவும், அரசின் மக்கள் நல திட்டப்படி பட்டா வழங்க வேண்டுமென்ற கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசின் மக்கள் நல திட்டப்படி அமல்படுத்தி, பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரினார்.

மாற்று இடம் குறித்து பரிசீலனை
ஆனால், மக்கள் நல திட்டத்தில், மாற்று இடம், மறு வாழ்வு வழங்க வகை செய்துள்ளது என்பதால் இந்த இடத்தை காலி செய்ய தயார் என உத்தரவாதம் அளித்தால் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்ய கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்ய அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனர். தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், நீதிமன்றம் கூறியதைப் போல, தற்போதைய இடத்தை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் காலி செய்வதாக உத்தரவாதம் அளித்தால், அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது தொடர்பான மனுதாரர் சங்க கோரிக்கையை பரிசீலிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து,விசாரணையை பிப்ரவரி 9ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications