தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு.. தமிழ்நாடு நகர்ப்புற குடியிருப்பு.. முதல்வரின் அட்டகாசமான உத்தரவு
சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு குடியிருப்புகளில் வசிக்கும் பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகையை 20 ஆண்டுகள் வரை சுலபத்தவணைகளில் செலுத்தலாம் என்று தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய சார்பில் கட்டிடங்கள் கட்டப்பட்டு பயனாளர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குடியிருப்புகளில் வசிக்கும் பயனாளர்கள் பயனாளிகள் குறிப்பிட்ட தொகையைப் பங்களிப்பு தொகையாகச் செலுத்த வேண்டும்.
கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இந்த பங்களிப்பு தொகையைக் குறைக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்ககைய ஏற்றுப் பங்களிப்பு தொகையை 20 ஆண்டுகள் வரை சுலபத்தவணைகளில் செலுத்தலாம் என்று தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

முதல்வர் உத்தரவு
இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் செயல்படுத்தப்படும் அடுக்குமாடிக் குடியிருப்பு திட்டங்களில் பயனாளிகளால் செலுத்தப்பட வேண்டிய பங்களிப்பு தொகை செலுத்துவதில் சிரமங்கள் இருந்து வருகிறது. இதனைப் போக்கும் வகையில், ஏழை எளிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்றுத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகையினை குறைத்தும், நீண்டகால சுலப தவணைகளில் செலுத்த ஏற்பாடு செய்தும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்
தமிழ்நாட்டில் குடிசைப் பகுதிகளில் வாழும் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திடக் கருணாநிதி 1970-ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் என்ற அமைப்பினை உருவாக்கினார். இதனால் பல்லாயிரக்கணக்கான குடிசைவாழ் மக்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழக்கூடிய வழிவகை ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, முதல்வர் ஸ்டாலின் குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல, குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் என்ற பெயரை 'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்' என்று பெயர் மாற்றம் செய்தார்.

குடிசைகள் இல்லாத தமிழகம்
தமிழ்நாட்டை 2031-ஆம் ஆண்டிற்குள் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றத் திட்டமிட்டு அதற்கான பணிகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 9.53 இலட்சம் ஏழை மக்களுக்கு அடுத்த 10 ஆண்டுகளில் வீடுகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மறுகட்டுமான திட்டப்பகுதியில் கட்டப்படும் குடியிருப்புகள் ஒதுக்கீடு பெறும் பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்குத்தொகையானது மிக அதிகளவில் இதுவரை இருந்து வந்த நிலையில், அத்தொகையை வெகுவாகக் குறைத்து, அதனையும் தவணை முறையில் செலுத்துவதற்கான வழிமுறைகளை உள்ளடக்கி, தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ரூ 500 செலுத்தினால் போதும்
அதன்படி, பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகையானது மாதம் ஒன்றுக்கு ரூ.250/- முதல் ரூ.500/- வரை பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுகட்டுமான திட்டப்பகுதியில் 100 சதவிகிதத்திற்கும் அதிகமான கூடுதல் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்ட / கட்டப்படவுள்ள திட்டப்பகுதிகளில் செலுத்தப்பட வேண்டிய பங்களிப்புத் தொகை சென்னை மற்றும் இதர நகரங்களில் மாதம் ரூ.250/-; 60 முதல் 100 சதவிகிதத்திற்குட்பட்ட கூடுதல் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்ட / கட்டப்படவுள்ள திட்டப்பகுதிகளில் செலுத்தப்பட வேண்டிய பங்களிப்புத் தொகை சென்னையில் மாதம் ரூ.400/- மற்றும் இதர நகரங்களில் மாதம் ரூ.300. 30முதல் 60 சதவிகிதத்திற்குட்பட்ட கூடுதல் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்ட / கட்டப்படவுள்ள திட்டப்பகுதிகளில் செலுத்தப்பட வேண்டிய பங்களிப்புத் தொகை சென்னையில் மாதம் ரூ.500/- மற்றும் இதர நகரங்களில் மாதம் ரூ.400.
Recommended Video

30 ஆண்டுகள்
30சதவிகிதத்திற்குக் குறைவான கூடுதல் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்ட / கட்டப்படவுள்ள திட்டப்பகுதிகளில், ரூ.1.50 இலட்சம் அல்லது திட்ட மதிப்பீட்டில் 10 சதவிகிதம் இவற்றில் குறைவான தொகையைச் சென்னை நகரத்திற்கும், ரூ.1.00 இலட்சம் அல்லது திட்ட மதிப்பீட்டில் 10 சதவிகிதம் இவற்றில் குறைவான தொகையை இதர நகரங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, 20 ஆண்டுகளில் சுலப மாதத் தவணையாகச் செலுத்தலாம். மேலும், தவணைத் தொகையினை தவறாமல் செலுத்தும் பயனாளிகளுக்குப் பகுதி வட்டித் தொகை திரும்ப வழங்கப்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
முதலாளியாக சூப்பர் சான்ஸ்.. 1.50 கோடி வரை மானியம்! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு! எப்படி பெறுவது? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications