தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு..நவ.19 சனிக்கிழமை வேலை நாள் - தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான அக்டோபர் 25ம் தேதியன்று கூடுதலாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நவம்பர் 19ஆம் தேதியன்று சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை என்று தொடர்ந்து 3 நாட்கள் மட்டுமே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பண்டிகைக்கு வெளியூர்களுக்கு செல்லும் அனைவரும் தீபாவளி பண்டிகை முடிந்த அடுத்த நாள் தான் மீண்டும் தங்கள் ஊர்களுக்கு திரும்ப முடியும். இதற்காக அக்டோபர் 25ம் தேதி தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

Tamil Nadu Govt announcement school and college students Nov 19 Saturday working day

மக்களின் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு அக்டோபர் 25ம் தேதி ஆகிய தீபாவளி மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உத்தரவிட்டது. இந்நிலையில், கூடுதல் விடுமுறை அளித்துள்ளதால் இதனை ஈடுகட்ட நவம்பர் 19ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நவம்பர் 19ஆம் தேதியன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி மறுநாள் விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19ஆம் தேதி பணிநாளாக அறிவித்து உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+