ரூ.800 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம், ரூ.80 கோடியில் வைகை குடிநீர் திட்டம்- மாஸ் அறிவிப்பு!
சென்னை: திருச்சி- மணப்பாறை மற்றும் கரூர் பகுதிகளுக்காக ரூ.800 கோடியில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று சட்டசபையில் அறிவித்தார். இதேபோல ரூ.80 கோடியில் வைகை கூட்டு குடிநீர் திட்டம் புதியதாக செயல்படுத்தப்படும் என்றார் அமைச்சர் நேரு.
தமிழ்நாடு சட்டசபையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று வெளியிட்ட அறிவிப்புகள்:

- சென்னை மாநகரில் மொத்த மக்கள்தொகை 89 லட்சம். வார்டுகளின் எண்ணிக்கை 200. ஒரு வார்டுக்கு சராசரியாக 40,000-க்கும் மேற்பட்டோர் கூடுதலாக வசிக்கின்றனர். சென்னையில் வார்டுகளை அதிகப்படுத்தி மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- நகர்ப்புற உள்ளாட்சித் துறைகளில் 3000 பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.
-கலைஞர் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சியாக சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் ரூ.75 கோடி செலவில் புதிய மாமன்ற கூடம் கட்டப்படும்.
-சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவை, பொதுமக்கள்-தனியார் பங்களிப்பு முறையில் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்
- கால்நடைகள் முதல் தடவை வீதிகளில் பிடிக்கப்பட்டால் ரூ.5000 அபராதமும், மறுமுறை பிடிக்கப்பட்டால் ரூ10,000 அபராதமும், 3ம் முறை பிடிபட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- நாய்களுக்கு கருத்தடை செய்து அவை இனப் பெருக்கம் செய்யாமல் பார்த்துக் கொள்ளும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- பணக்காரர்கள் நாய் வளர்க்கிறார்கள். அவர்கள் வெளியில் அழைத்து வரும் போது அசம்பாவிதம் நடக்கிறது. நாய்களை பூங்காவிற்கு அழைத்து வரும் போது சில தவறுகள் நடந்து வருகின்றன.
-கழிவுநீர் உந்து நிலையங்கள்/ சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் ரூ.50 கோடியில் நவீன உபகரணங்கள் நிறுவப்படும்.
- பள்ளிப்பட்டு மற்றும் திருவான்மியூரில், குடிநீர் விநியோகிக்கும் பகுதிகளுக்கு 24x7 குடிநீர் வழங்கும் முறை பன்னாட்டு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.
- சென்னை பெருநகரில் ஒரு லட்சம் வணிக நிறுவனங்களில், பல மாடி குடியிருப்பு வளாகங்கள் மற்றும் வணிகத்துடன் கூடிய குடியிருப்புகளுக்கு குடிநீர் அளவுமானிகள் அமைக்கப்படும்.
- நீண்ட காலமாக உபயோகத்தில் இல்லாத அசையா சொத்துகளை கணக்கெடுத்து அவற்றிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்திற்கு வருமானம் ஈட்டும் சாத்தியக் கூறுகள் ஆராயப்படும்.
சென்னை மாநகரில் விடுபட்ட மற்றும் புதிதாக உருவான தெருக்களுக்கு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
- 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை புனரமைத்து அதன் செயல்திறனை அதிகரிப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை கலந்தாலோசகர் மூலம் தயாரிக்கப்படும்.
- ரூ.150 கோடியில் 25 பேரூராட்சிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
- ரூ.315.50 கோடியில் 575 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும்.

ரூ.25 கோடி மதிப்பீட்டில் தள்ளு வண்டிகளுக்கு மாற்றாக 500 மின்கல வாகனங்கள் மற்றும் 150 இலகுரக வாகனங்கள் பேரூராட்சிகளுக்கு வழங்கப்படும்.
- ரூ800 கோடியில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். திருச்சி- மணப்பாறை ஒன்றியத்தின் 248 ஊரக குடியிருப்புகளுக்கும் பொன்னம்பட்டி பேரூராட்சி, வையம்பட்டி- மருங்காபுரி ஒன்றியங்களின் 591 ஊரக குடியிருப்புகளுக்கும் கரூர்- கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை ஒன்றியங்களின் 64 குடியிருப்புகளுக்கும் இந்த குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும. மொத்தம் 4.85 லட்சம் மக்கள் பயனடைவர்.
- ரூ80 கோடியில் 29,000 பேர் பயன்பெறும் வகையில் வைகை புதிய கூட்டு குடிநீர் திட்டம் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications