சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் டிச.15 முதல் 23 வரை அரையாண்டுத் தேர்வு..என்னென்ன கட்டுப்பாடுகள்..விடுமுறை எப்போது?

Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு தொடங்கி 23.12.2022 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 24 ம் தேதி முதல் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்ற ஜனவரி 2, 2023 ம் ஆண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும், 6, 8, 10, 12-ம் வகுப்புகளுக்கு காலையிலும், 7, 9, 11-ஆம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட அறிவிப்பில்

 Tamil Nadu Half Yearly Exams begins on December 15th to 23rd December

திருவள்ளூர் மாவட்டம் 2022-2023 ஆம் கல்வியாண்டில் அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கான அரையாண்டுத் தேர்வு 15.12.2022 முதல் 23.12.2022 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இத்தேர்விற்கான கால அட்டவணை இணைத்து அனுப்பப்படுகிறது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள வழிமுறைகள் மற்றும் கீழ்காணும் அறிவுரைகளை பின்பற்றி அரையாண்டுத் தேர்வினை நடத்திட அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுவான அறிவுரைகள்:

அரையாண்டுத் தேர்வு டிசம்பர் மாதம் 15.12.2022 முதல் 23.12.2022 வரை நடைபெறும். 6,8,10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு முற்பகலிலும் மற்றும் 7, 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெறும், * அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் உள்ள 5 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப்பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாக வினாத்தாட்கள் வழங்கப்படும்.

தேர்வு நாட்களுக்குரிய வினாத்தாட்களை பெற தங்கள் பள்ளி சார்பாக ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து, அவ்விவரத்தினை சார்ந்த விளாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப்பள்ளித் தலைமையாசிரியருக்கு முன்கூட்டியே தகவலிளை தெரிவித்தல் வேண்டும்.

அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையின்படி, தங்கள் பள்ளி சார்பாக அனுமதிக்கப்பட்ட நபர் சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப்பள்ளி தலைமையாசிரியரை அணுகி அந்தந்த தேர்வு நாட்களுக்குரிய (முற்பகல் தேர்விற்கான வினாத்தாட்கள் காலை 7.30 மணியிலிருந்தும், பிற்பகல் தேர்விற்குரிய வினாத்தாட்கள் நண்பகல் 12 மணியிலிருந்தும்) வினாத்தாட்களை பெற்று உரிய நேரத்திற்குள் மாணவர்களுக்கு வழங்கி தேர்வுகளை எவ்வித புகார்களுக்கு இடமளிக்காமல் சிறப்பான முறையில் நடத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலாண்டுத் தேர்வில் பள்ளிகளே வினாத்தாள்களைத் தயாரித்துக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அரையாண்டுத் தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 ம் தேதி முதல் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்ற ஜனவரி 2, 2023 ம் ஆண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Tamil Nadu Half yearly Examination The examination was scheduled to begin on December 15, 2022, and end on December 23, 2022, according to the officials.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X